சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் திறக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு மட்டும் கண்காணிப்பில் ஈடுபட்ட காவல் துறையினர் அழகாபுரம், ராமகிருஷ்ணா சாலை, சாரதா கல்லூரி சாலை […]
