புதுக்கோட்டை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வெளியில் சென்றவர்களிடம் காவல் துறையினர் அபராதம் வசூலித்துள்ளனர். உலகெங்கிலும் கொரோனா பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் கட்டமைக்கப்பட்டு இன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியில் செல்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் […]
