நாமக்கல் மாவட்டத்தில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையிலுள்ள தடுப்புச் சுவரை உடைத்து பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள அசக்காட்டுப்பட்டி பகுதியில் சபேசன் என்பவர் வசித்து வந்தார். அவர் அந்த பகுதியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் செல்லிப்பட்டிக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்லும் பணியை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சபேசன் கொல்லிமலையிலிருந்து ஒரு டிப்பர் லாரியில் பொருட்களை ஏற்றி மலை அடிவாரத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி […]
