தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்போர் ஒரு நாளுக்கு 1 முறை மட்டுமே வெளியே வர வேண்டுமென அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்று வரை ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பல தளர்வுகள் தற்போது ஏற்படுத்தப்பட்ட நிலையில், பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 10,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பத்திற்கும் மேற்பட்ட மாநிலங்களில் மீண்டும் […]
