விஜயமங்கலத்தில் சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதால் சித்தப்பாவை மகனே அடித்து கொன்றது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த காட்டுத்தோட்டத்தை சேர்ந்த மூர்த்திக்கு (வயது 62) சுப்பிரமணி, மாரப்பன் என இரண்டு அண்ணன்களும் கருப்பசாமி என்ற தம்பியும் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக கொங்கன்பாளையதில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. இதை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாகப்பிரிவினை செய்து கிரையம் செய்துள்ளனர். ஆனால் மாரப்பனின் மகன் தினேஷ் மட்டும் சொத்து பிரிப்பதில் தங்களை சித்தப்பா மூர்த்தி […]
