Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“முன்விரோதத்தால்” கொலை செய்யப்பட்ட தொழிலாளி… தலைமறைவான தம்பதி… வலைவீசி தேடல்…!!

கணவனும் மனைவியும் சேர்ந்து தொழிலாளியை கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் கூலித் தொழில் செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அசோகன் என்பவருக்கும் பல வருடங்களாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தனது வீட்டுக்கு குடிநீர் குழாய் அமைப்பதற்கான பணியில் கருப்பண்ணன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அசோகனும்  அவரது மனைவி செல்வியும் கருப்பண்ணனை குடிநீர் குழாயை அமைக்க விடாமல் தடுத்துள்ளனர். இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காட்டு யானை கூட்டம்… தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம்… பெண் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளது. அதனை சுற்றி அடர்ந்த வனப் பகுதிகள் இருப்பதால்  உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தேயிலைத் தோட்டங்களிலும் அதன் அருகில் வசித்து வரும் தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள நல்லகாத்து எஸ்டேட் 1வது  பிரிவில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஹீட்டர் போட சென்ற பெண்… திடீரென கேட்ட சத்தம்… பார்க்கச் சென்ற கணவருக்கும் நேர்ந்த கொடுமை..!!

மின்சாரம் தாக்கி கணவன் –  மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அருகிலுள்ள அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் விஜயகுமார்- சசிகலா. விஜயகுமார் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் . இவர்களுக்கு விகாஷ் என்ற மகனும் ரேஷ்மா என்ற மகளும் உள்ளனர்.  குழந்தைகள் இருவரும் விழுப்புரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். மேலும் விஜயகுமாரும் சசிகலாவும் விழுப்புரத்திற்கு   இன்று செல்ல முடிவு செய்திருந்தனர். இச்சூழலில் வீட்டில் உள்ள […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

10 வயது சிறுமி…” 1 நிமிடத்தில் 48 நினைவுச்சின்னம்”… அசத்தல் சாதனை..!!

இந்திய சாதனை புத்தகத்தில் 10 வயது சிறுமி இடம் பெற்ற நிகழ்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள அருளானந்த நகரைச் சேர்ந்த தம்பதியினர்  பாலகிருஷ்ணன் -நதியா. இத்தம்பதியருக்கு 10 வயதில் தயாநிதிதா என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள  தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். தயாநிதிதா  ஒரு நிமிடத்தில்  48 வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் அதை கட்டியவர்களின் பெயர்களைக் கூறி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இந்த சாதனை நிகழ்ச்சி தஞ்சாவூரில் நேற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய மது போதையால்… நண்பர்களே எதிரிகளான கொடுமை… இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்…!!

மதுபோதையில் வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்(35). இவர் தனது நண்பர்களான சுரேஷ்(30) மற்றும் அசோகனுடன்(30)  சேர்ந்து நேற்று முன்தினம் பாண்டிபஜார் அருகே உள்ள மதுக்கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது போதை அதிகமானதால் அவர்களுக்கிடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் மற்றும் அசோகன் இருவரும் சேர்ந்து செந்திலை அடித்து உதைத்துள்ளனர். அவர் அடி தாங்காமல் உயிர்பிழைக்க  மதுபான கடையை விட்டு வெளியே ஓடி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்… லாரி மீது மோதியதில்… இருவர் உயிரிழந்த பரிதாபம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் மீது மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் அதே பகுதியில் வசிக்கும் அமிர்தவல்லி , விக்னேஸ்வரன், தனம், சசிகலா தேவி, சக்தி சுந்தரம், ஆகியோருடன் ஒரு காரில் மேல்மருவத்தூர்  கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று காலையில் அனைவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். காளிமுத்து காரை ஓட்டியுள்ளார். இன்று  காலை 8.30 மணி  அளவில் கடலூர் மாவட்டத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அறுவைசிகிச்சையின் போது” அழகான குழந்தை பிறந்தது…. சில நிமிடங்களில் தாயின் உயிர் பிரிந்தது – சோக சம்பவம்…!!

பிரசவத்திற்கான அறுவைசிகிச்சையின் போது பெண் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்துள்ள நாகலாபுரம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதிகள் ராமநாதன் – முத்துலட்சுமி. இதில் முத்துலட்சுமி விளாத்திகுளம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது.  இந்நிலையில் முத்துலட்சுமி மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். இதையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முத்துலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. எனவே  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புத்தாண்டு வாழ்த்து கூற, கடற்கரையில் கொண்டாட தடை – காவல் ஆணையர் எச்சரிக்கை…!!

சென்னையில் கடற்கரையில் மக்கள் யாரும் புத்தாண்டு கொண்டாட வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அச்சுறுத்தலால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினா, பெசன்ட் நகர் பீச் உள்ளிட்ட கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் டிசம்பர் 31-ம் தேதி மக்கள் நள்ளிரவில் மெரினா கடற்கரை, பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். நட்சத்திர […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்காக கிளம்பியபோது…. தம்பதிகளுக்கு நேர்ந்த துயரம்…. சென்னையில் சோகம்…!!

மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அருகே உள்ள அயப்பாக்கத்தில் வசித்து வரும் தம்பதியினர் விஜயகுமார் – சசிகலா. இவர்கள் விழுப்புரத்தை சேர்ந்தவர்களாவர். தொழிலுக்காக சென்னையில் வந்து தங்கியுள்ளனர். விஜயகுமார் அம்பத்தூர் பகுதியில் உலா கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று மனைவி சசிகலா தனது சொந்த ஊரான விழுப்புரத்திற்கு ஒரு துக்க வீட்டிற்கு செல்வதாக புறப்பட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிலத்தகராறில்… முதியவருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்… பறிமுதல் செய்யப்பட்ட நான்கு பக்க கடிதம்….!!

மிரட்டலுக்கு பயந்து முதியவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(69). இவர் அதே பகுதியில் 10 ஆண்டுகளாக மிதிவண்டி பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார். செல்வராஜ் தனது நண்பர் முருகன் என்பவருக்கு இடைத் தரகராக செயல்பட்டு தினேஷ் என்பவருக்கு சொந்தமான 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில்  அந்த நிலம் ஏற்கனவே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் கைவரிசை காட்டிய பெண்கள்… சுதாரித்த மூதாட்டி… பின்னர் நடந்த சம்பவம்….!!

ஓடும் பேருந்தில் இரு பெண்கள் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டி  கிராமத்தைச் சேர்ந்தவர்  பார்வதி(61) . இவர் தனது உறவினர்களுடன் இளையான்குடி அருகே உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அரசு பேருந்தில் சென்றுள்ளார். செங்குளம் பகுதியில் பேருந்து சென்ற போது பேருந்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களில் ஒருவர் பார்வதியின்  கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருட முயன்றுள்ளார். தனது கழுத்தில் இருந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சவால் விட்டதால் கொலை செய்யப்பட்ட வாலிபர்… கைதான குற்றவாளிகள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து திருப்பூரில் உள்ள அவரது உறவுக்காரர் சக்திவேல்  என்பவருடன் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பல்லடம் சாலையில் உள்ள தெற்கு பாளையம் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் முருகன் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம்  குறித்து  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி… சிசிடிவியில் சிக்கிய ” பலே திருடன்”..!!

கூட்டுறவு வங்கி கிளையில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கியின் கிளை அமைந்துள்ளது. இங்கு டிசம்பர்  27ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் வங்கியின்  கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சத்தம் கேட்டு வந்த காவலாளியை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து மாவட்ட பொது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மாந்திரீக பூஜை… நம்பி சென்ற தம்பதிகளை… அரிவாளால் வெட்டி… திருப்பூர் அருகே நேர்ந்த கொடூரம்..!!

மாந்திரீக பூஜை செய்வதாக கூறி தம்பதியரை அரிவாளால் வெட்டிவிட்டு பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அகரப்பாளையம்  பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஆறுமுகம் – ஈஸ்வரி. ஆறுமுகம் அப்பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இத்தம்பதியினருக்கு உதயகுமார் என்ற மகன் உள்ளார். அவர் திருமணமாகி கோவை மாவட்டத்தில் பைனான்ஸ் கடை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் உதயகுமார்  குழந்தை இல்லாமல் இருந்துள்ளார்.  இதனால்  ஈஸ்வரி தன்னுடைய மகன் உதயகுமாருக்கு குழந்தைப்பேறு வேண்டி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த லாரி … திடீரென கேட்ட சத்தம்… லாரி ஓட்டுனருக்கு நேர்ந்த கொடூரம்..!!

நின்று கொண்டிருந்த லாரி மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகன்கள் திருநாவுக்கரசு(42) மற்றும் சுப்புராஜ்(37). இவர்கள் இருவரும் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தனர். நேற்று மாலையில் தூத்துக்குடியிலிருந்து மரதடிகளை  லாரியில் ஏற்றி கொண்டு  சென்று கொண்டிருந்தனர். லாரியை திருநாவுக்கரசு ஓட்டியுள்ளார். அவர் தூக்கம் வருவதாக கூறியதால்  சுப்புராஜ்  லாரியை ஓட்ட ஆரம்பித்துள்ளார். அதிகாலையில் சீதபற்பநல்லூர் அருகே சென்றபோது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பால் கறக்க சென்ற வியாபாரி… அரிவாளால் தாக்கிய மர்ம கும்பல்… காரணம் என்ன?…

பால் வியாபாரியை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பிச்சைமணி – பிருந்தா.பிச்சைமணி  பால் வியாபாரம் செய்து வந்தார். இத்தம்பதியருக்கு  2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.  தினமும் அதிகாலை 3 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு அருகிலுள்ள  கிராமங்களுக்கு சென்று மாடுகளில் பால் கறந்து அதனை கடைகளுக்கு கொண்டு சென்று பிச்சைமணி  விற்று வந்தார். இன்று காலையும் அவர் வழக்கம்போல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரியாணிக்காக தற்கொலை – தொடரும் அவலம்…!!

சிறுமி ஒருவர் தனது அம்மா பிரியாணி செய்து தர மறுத்ததால் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அருகே குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் தன்னுடைய பாட்டியிடம் புத்தாண்டு அன்று பிரியாணி செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு அவருடைய தாயார் செய்து தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பிரியாணிக்காக சிறுமி தற்கொலை கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட தற்கொலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 வயது சிமிக்கு லவ் டார்ச்சர்…. சிறுமியின் தாய் திட்டியதால்…. காவலர் தற்கொலை முயற்சி…!!

காவலர் ஒருவர் தனது காதலுக்கு சிறுமியின் தாயார் மறுப்பு தெரிவித்ததால் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் மணிசங்கர்(22). இவர்  சம்பவத்தன்று தனது குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அருகில் உள்ளவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் அனுமதித்துள்ளனர். இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஆபத்தான நிலையில் இருந்த அவரை மேல்சிகிச்சைக்காக பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“அம்மாகிட்ட போக மாட்டேன்” பெற்ற மகனை தாய் செய்த செயல்…. காதலனே காட்டி கொடுத்த சம்பவம்…!!

பெண் ஒருவன் தனது குழந்தையை கழுத்தை நெறித்து கொல்வதை அவரது கள்ளகாதலனே காட்டி கொடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள முட்புதரில் சிறுவன் ஒருவன் பேச்சு மூச்சு இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பின்னர் அந்த சிறுவனுக்கு முதலுதவி அளித்து அப்பகுதியினர் உயிரை காப்பாற்றியுள்ளனர். இதையடுத்து சிறுவனை போலீசாரிடம் ஒப்படைத்த போது அச்சிறுவன், தனது தாய் பெயர் சித்ரா என்றும் அவருடன் தான் செல்ல மாட்டேன் என்றும் அந்த சிறுவன் கதறி அழுதுள்ளார். இதனால் காவல் துறையினர் சந்தேகமடைந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“தாய்மைக்கு எடுத்துக்காட்டு” ஆட்டுக்குட்டிக்கு தாயாகிய நாய்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

நாய் ஒன்று ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறி பாலூட்டியுள்ள அன்புகாட்டும் சம்பவம் தாய்மையை உணர்த்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசிப்பவர் துரைசாமி. இவர் நாய்க்குட்டி ஒன்றை  வீட்டில் வளர்த்து வந்துள்ளார். அதேபோல ஆட்டுக்குட்டி ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டுக்குட்டியை ஈன்ற தாய் ஆடு நான்கு நாட்களில் உயிரிழந்துள்ளது. இதனால் குட்டி உணவு இல்லாமல் தவித்து வந்துள்ளது. இதையடுத்து தன்னுடைய தாய் இல்லாமல் தவித்த ஆட்டுக்குட்டிக்கு துரைசாமி வளர்க்கும் நாய் தாயாக மாறி ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காணாமல் போன மடிக்கணினி… விசாரணையில் தெரியவந்த உண்மை… காவல்துறை அதிரடி..!!

சென்னையில் செல்போன் மற்றும் மடிக்கணினிகளை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிரிதரன் என்பவர் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய செல்போன் மற்றும் மடிக்கணினி போன்ற பொருட்கள் திருடு போனதாக காவல்நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி  காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் , […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“காதல் திருமணம்” வீட்டில் எதிர்ப்பு… மனமுடைந்த வாலிபர்… பின்னர் நடந்த கொடூரம்….!!

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய  பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கந்தையா. இவருடைய மகன் கணேசன்(24).கணேசன்  பல்லடம் அருகே உள்ள தனியார் சாய தொழிற்சாலையில் தங்கி ஓட்டுனராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் சொந்த ஊரில் உள்ள தனது  உறவுக்கார பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஏற்கனவே இவரது சகோதரனுக்கு  அந்தப் பெண்ணுடைய அக்காவை திருமணம் செய்ததால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாருமில்லை… பெண்ணின் விபரீத முடிவு… கந்துவட்டி கொடுமையா? போலீஸ் விசாரணை..!!

சேலத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வெங்கடேசன்- கிருஷ்ணவேணி. வெங்கடேசன் எலக்ட்ரீசியனாக  பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியருக்கு  இரண்டு மகன்கள் உள்ளனர். கிருஷ்ணவேணி அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவில் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.மகளிர் சுய உதவிக்குழுவினர் கடனை திருப்பி செலுத்துமாறு கிருஷ்ணவேணியிடம் கூறியுள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில் சரியான வேலையும் போதிய வருமானமும் இல்லை என்பதால் அவர் கடனை செலுத்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்… லாரியின் பின்புறத்தில் மோதி… இருவர் உயிரிழந்த பரிதாபம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்புறத்தில் இடித்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அண்ணா நகரை  சேர்ந்தவர்கள் கோகுல் மற்றும் யோகராஜ். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் விடுமுறையை ஒட்டி பெங்களூருவில் உள்ள நண்பர்களை பார்க்க சென்றுள்ளனர். பின்னர் அன்றைய தினம் இரவில் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 12 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது  கார் திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது .மேலும் முன்னால் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வீச்சரிவாளுடன் சுற்றி திரியும் வாகன கொள்ளையர்கள்… செங்கல்பட்டில் பரபரப்பு…

வீச்சரிவாளுடன் வாகன கொள்ளையர்கள் சுற்றி திரிந்த காட்சிகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் காவல்துறையினர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது  காவலர்களை பார்த்த அடையாளம் தெரியாத நபர்கள் தாங்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர். பின்னர் காவல்துறையினர் அந்த வாகனத்தை கைப்பற்றி சோதனையிட்டுள்ளனர் . சோதனையில் அது காயாரம்பேடு பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான வாகனம் என்று தெரியவந்துள்ளது. அதனை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடும்பத் தகராறு… 2 குழந்தைகளுடன் கணவன் மனைவி தற்கொலை முயற்சி… பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி….!!

சுரண்டையில் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி செய்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியை சேர்ந்த தம்பதியினர் கண்ணன்- சீதாலட்சுமி.கண்ணன் கூலித்தொழில் செய்து வந்தார். இத்தம்பதியருக்கு  2 பெண் குழந்தைகள் உள்ளனர். கண்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது . மேலும் அவர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுரண்டையில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு கண்ணன் அவருடைய மனைவி  சீதாலட்சுமி மற்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்ட மூதாட்டி… தலைமறைவான குற்றவாளி… தனிப்படை மூலம் குற்றவாளி கைது…!!

மூதாட்டியை  கத்தியால் குத்தி கொலை செய்த  வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசன்குளம் பகுதியில்  வசித்து வந்தவர் கமலம்.  கடந்த அக்டோபர் 31ஆம் தேதி கமலம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கமலத்தின் பேத்தியின் கணவன் ராஜா என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.  காவல்துறையினர் தன்னை தேடுவதை அறிந்த ராஜா தலைமறைவாகி இருந்தார். எனவே அவரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கேஸ் இணைப்பில் பிரச்சனை”உள்ளது… போலி அடையாள அட்டை மூலம்… பண மோசடி….!!

கேஸ் ஊழியர் என்று கூறி போலி அடையாள அட்டை மூலம் பெண் ஒருவர் பண மோசடி செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் அண்ணா பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறார். கடந்த 21ஆம் தேதி  32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முதுகிருஷ்ணனின் வீட்டிற்கு வந்துள்ளார் . பின்னர் தான் கேஸ்  கம்பெனியில் ஊழியராக பணிபுரிவதாக  கூறி தனது அடையாள அட்டையை காண்பித்து உள்ளார். வீட்டிலுள்ள கேஸ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டீ குடிக்க போனபோது… திடீரென வந்த யானை.. உயிரிழந்த காவலாளி…. அச்சமூட்டும் சாலை…!!

காட்டு யானை தாக்கி பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கோவை மாவட்டத்திலுள்ள செல்வபுரம் என்ற பகுதியில் முகமது நிவாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருதமலை சாலையில் கட்டுமான பணி நடைபெறும் ஒரு தனியார் இடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முகமது நிவாஸ் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின் அருகே உள்ள ஒரு டீ கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அச்சமயம் திடீரென எதிர்பாராவிதமாக அருகில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஒரு மீனின் விலை ரூ.26,000… மீனவருக்கு அடித்த அதிர்ஷ்டம்….!!

மீனவரின் வலையில் சிக்கிய 110 கிலோ எடையுள்ள சுறா மீன் 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோடியக்கரையில் ஆண்டுதோறும் மீன்பிடி பருவமானது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிய உடன் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் மீன்பிடி பருவமானது மார்ச் மாதம் வரை நீடிப்பது வழக்கமாக உள்ளது. இவ்விடத்திற்கு ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான படகுகளுடன் மீனவர்கள் வந்து முகாமிட்டு தங்குவர். அங்குள்ள படகுத்துறையில் தங்களது படகுகளை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறோம்”- பெண் காவலருக்கு வளைகாப்பு…! காவல் நிலையத்தில் நெகிழ்ச்சி சம்பவம்…!

மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் இணைந்து பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாகா நத்தத்தில் சுகன்யா என்ற பெண் காவலர் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணி புரிகிறார். இந்நிலையில்  சுகன்யாவிற்கு அவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் இணைந்து வளைகாப்பு விழா நடத்த முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பேபி தலைமையில் அனைத்து போலீசாரும் இணைந்து காவல்நிலையத்தை ஒரு வீடு போல மாற்றினார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிற்பங்களைச் செதுக்கும் சிறுமி… விடுமுறை தந்த வாய்ப்பு… கற்றுத் தேர்ந்த கலைகள்…!!

கொரோனா ஊரடங்கு விடுமுறையில் சிற்பக்கலையை கற்றுக்கொண்டு தந்தைக்கு உதவும் சிறுமியின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  புதுக்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தின் அருகே உள்ள தெருவில் முத்துக்குமார் என்ற தச்சு தொழிலாளி வசித்து வருகிறார். முத்துக்குமாருக்கு அஞ்சனா ஸ்ரீ என்ற 12 வயது மகள் உள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் தனது படிப்பு மற்றும் கல்வித்தகுதியை மறந்து கிடைக்கும் தொழிலை செய்து வருகின்றனர். ஆனாலும் தனது பரம்பரை தொழிலை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பழைய இரும்பு கடையில்… பள்ளி பாட புத்தகங்கள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா பாடப் புத்தகங்களை இரும்பு கடையில் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் தமிழக அரசால் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் பழைய இரும்புக் கடைக்கு சென்று சோதனை செய்தனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தீம் பார்க்கிற்கு குளிக்க சென்ற இளைஞர்… திடீரென தண்ணீருக்குள்… இளைஞருக்கு நேர்ந்த கொடுமை….!!

தீம் பார்க்கில் குளித்து கொண்டிருந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மகன் அஜித்குமார்(24). அஜித்குமாரும்  அவருடைய நண்பரும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள வெண்ணந்தூர் அருகே சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள பரவச உலகம் தீம் பார்க்கில் குளித்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக அஜித்குமார் நீரில் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது நண்பர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து… “நகை மற்றும் பணம் கொள்ளை”… சிசிடிவியில் பதிவாகிய முக்கிய காட்சி…!!

கோட்டாறு பகுதியில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டாறு பகுதியை சேர்ந்தவர் ஹமீத்  பாதுஷா. இவர் நாகர்கோவிலில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு இன்று காலையில் ஹமீத் பாதுஷா வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர்  அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அவர்   உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 20 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் “சாப்பிட்டப் பானி பூரிக்கு காசு கேட்ட ஊழியரை…” கழுத்தை அறுத்த கொடூர சம்பவம்..!!

சாப்பிட்ட பானி பூரிக்கு பணம் கேட்டதால் கடைக்காரரின் கழுத்தை இளைஞர்கள் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் விரேந்தர் பால் . இவர் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் விரேந்தர் பால் மாலையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் பானிபூரியை  சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் சென்றுள்ளனர்.  சாப்பிட்ட பானிபூரிக்கு விரேந்தர் பால் பணம் கேட்டுள்ளார். பணம் கேட்டதால் குடிபோதையில் இருந்த மூவரும் ஆத்திரமடைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… குறுஞ்செய்தி மூலம் பணம் கொள்ளை… நூதன முறையில் திருடும் கொள்ளையர்கள்….!!

குறுஞ்செய்தி மூலம் மக்களிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்க சைபர் குற்றவாளிகள் முயன்று வருவதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். வங்கி சார்ந்த சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . மக்களிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்க சைபர் கொள்ளையர்கள் பல புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றனர். தற்போது ஒரு நூதன கொள்ளை முறை உருவாகியுள்ளது.  அதாவது  ஒரு நபரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது என்ற   குறுஞ்செய்தி ஒன்று முதலில்  செல்போனுக்கு வருகிறது. குறுஞ்செய்தி வந்தவுடன் அந்த அடையாளம் தெரியாத […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வித்தியாசமான முறையில் வழிப்பறி… செல்போன் எண் மூலம்… சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள்….!!

இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து கூகுள் பே செயலி மூலம் மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே உள்ள சாலையில் நெற்குன்றதை  சேர்ந்த ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது திடீரென்று எட்டு பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்துள்ளது. பின்பு ராஜாவிடம்  கத்தியை காட்டி மிரட்டி 3000 ரூபாய் பணத்தையும் அவரது கை கடிகாரத்தையும் பறித்துக் கொண்டுள்ளனர். அதோடு மட்டுமல்லாது அவரது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“8 மணி நேரம்” கண்களை கட்டிக்கொண்டு சாகசம்….விருது பெற்ற கோவை இளைஞர்…!!

நபர் ஒருவர் 8 மணி நேரம் கண்களை கட்டிக்கொண்டு அபாயகரமான சாதனைகளை செய்து விருதை பெற்றுள்ளார். கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் மேஜிக் கலை நிபுணரான டிஜே வர்கீஸ். இவர் கடந்த 25 வருடங்களாக மேஜிக் செய்து வருகிறார். மேஜிக் கலையில் தனெக்கென்று ஒரு அடையாளத்தை வைத்து இருக்கிறார். இவர் தன்னுடைய கண்களை துணியால் கட்டிக் கொண்டு அபாயகரமான சாகசங்கள் செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு, யுனிவர்சல் புக் ஆஃ ரெக்கார்டு என்ற பல்வேறு உலக சாதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பூட்டிய காருக்குள் இறந்த…. 30 வயது கணவர்…. நம்ப முடியாமல் தவித்த மனைவி…. சோக சம்பவம்…!!

மனைவி ஒருவர் தனது கணவர் இறந்ததை நம்ப முடியாமல் பித்து பிடித்தது போல் இருந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் வசித்து வருபவர் மதன்குமார். இவர் மனைவியுடன் தன்னுடைய குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி சுகன்யா வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு ரிஷிதா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த காரில் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து மது குடித்துள்ளார். அப்போது நீண்ட […]

Categories
தற்கொலை நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்…. மனமுடைந்து தற்கொலை… போலீஸ் துன்புறுத்திருக்காங்க… மறியலில் இறங்கிய பொதுமக்கள்….!!

காவல் துறைக்கு விசாரணைக்கு சென்று வந்த நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை  மாவட்டத்தில் உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஜானகி. இவர் கடந்த 22 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார் . மேலும் அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியும் மாயமானது.  இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த  அய்யாவு என்பவரை காவல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென்று வெடித்த வாகனத்தின் டயர்… தவறி விழுந்த வாலிபர்… பரிதவிக்கும் குடும்பத்தினர்….!!

டயர் வெடித்து இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி பகுதியை  சேர்ந்தவர் வீரணன். இவருடைய  மகன் செல்வம். செல்வம் கூலி தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கோடாங்கிபட்டி அருகே உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். பின்னர் அன்றைய தினம் இரவில் செல்வம்  தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது போடி- தேவாரம் சாலையில் நாகலாபுரம் விலக்கு அருகில்  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சமைக்க மட்டன் வாங்கி கொடுத்துவிட்டு…. மாயமான கணவர்… கிணற்றில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

மூலைக்கரைப்பட்டி அருகே கிணற்றில் மர்மமான முறையில் டெய்லர் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கீழசிந்தாமணியை சேர்ந்த ராசையா நாடார் மகன் அந்தோணி லாசர் (வயது 44). இவர் டெய்லர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரோஸ்லின்மேரி (42) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 25-ந் தேதி கிறிஸ்துமஸ் அன்று மதியம் மட்டன் வாங்கி வீட்டில் சமைக்க கொடுத்துள்ளா். பின்னர் வெளியே சென்று வருகிறேன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள் விபத்து

நேருக்கு நேர் மோதிய மொபட்-லாரி… தூக்கி வீசப்பட்ட மாணவன்…. நேர்ந்த சோக முடிவு…!!

லாரி-மொபட் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்உயிரிலாண்டித சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்தவர் முருகேசன். ஆட்டோ டிரைவர். அவருடைய மகன் தினேஷ்குமார் (19), மகள் அனுசியா. தினேஷ்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கணிப்பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.இந்தநிலையில் தினேஷ்குமார் கரூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டு் நேற்று மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார். மதியம் 2.30 மணி அளவில் கொடுமுடியை அடுத்த சாலைப்புதூர் அருகே சின்னப்பையன் புதூர் என்ற இடத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அணைக்கு குளிக்க சென்ற நண்பர்கள்… “மாயமாகிய வாலிபர்”… சடலமாக மீட்கப்பட்ட கொடுமை…!!

அணையில் குளித்துக் கொண்டிருந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கட்டனூரை சேர்ந்தவர் முத்துகுமார். முத்துகுமாரின் மனைவி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர்  தனது  நண்பர்களுடன்  குற்றாலத்தில் குளிப்பதற்காக காரில் சென்றுள்ளார். ஆனால் குற்றால அருவியில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் அவர்கள்  செங்கோட்டை அருகே உள்ள அணை பகுதிக்கு குளிக்க  சென்றனர். அங்குள்ள மோட்டை அணையில் முத்துக்குமார் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விஷம் குடித்த வங்கி ஊழியர்… சாவிற்கு யார் காரணம்… காவல் துறையினரிடம் சிக்கிய கடிதம்…!!

விஷம் குடித்து வாங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலில் உள்ள சற்குணவீதியை சேர்ந்தவர் கோபி. இவர் குருந்தன்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணிபுரிந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த கோபி திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

3 வயது சிறுவன்… விளையாடிக் கொண்டிருந்தபோது… குளத்தின் அருகில் சென்றதால்… நேர்ந்த துயரம்…!!

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பெலிக்ஸ் – ரோஸி. இத்தம்பதியினருக்கு மூன்று வயதில் மைக்கேல் என்ற மகன் உள்ளான். சம்பவத்தன்று மைக்கேல் வீட்டிற்கு அருகே உள்ள சிவன் கோயில் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக மைக்கேல் குளத்தில் தவறி விழுந்தான். இதைப் பார்த்த உறவினர்கள் குளத்தில் இறங்கி மைக்கேலை தேடியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீயணைப்பு நிலைய  வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மதுபோதையில்…” தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவர்”… பின்னர் ஏற்பட்ட கொடூர சம்பவம்..!!

மதுபோதையில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு ஆண் சடலம் உடல் சிதறி கிடந்துள்ளது. இது குறித்து ரயில்வே  காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த  ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பூமாலைப்பட்டியை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

6 மாதத்தில்..” முடிவுக்கு வந்த காதல் திருமணம்”… யாருமில்லா நேரத்தில் புது மாப்பிள்ளையின் முடிவு..!!

குடும்ப தகராறில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவர் அப்பகுதியில் உள்ள நகை கடையில் ஊழியராக பணிபுரிந்தார். பூபதி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காயத்ரி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். திருமணம் முடிந்த பிறகு கணவனும் மனைவியும் தனிக்குடித்தனம் சென்றுள்ளனர். கடந்த சில நாட்களாக கணவனுக்கும் மனைவிக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அறியாத வயதில் அவசர கல்யாணம்…. “பலிகடாவான” ஒன்றுமே அறியாத 3 மாத குழந்தை…!!

அறியாத வயதில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரால் 3 மாத குழந்தை இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியிலுள்ள கிளாக்குளத்தில் வசிப்பவர் லட்சுமண லிங்கம்(19). இவர் அந்த பகுதியில் உள்ள முத்துமணி(18) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் திருமணத்துக்கு பிறகு திருப்பூரில் தங்கியிருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் முத்துமணிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. […]

Categories

Tech |