Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் போக்குவரத்து நெரிசலில்…. சிக்கிய ஆம்புலன்ஸ்…. நோயாளி பரிதாப சாவு…!!

சாலையில் ட்ராபிக் ஜாம் காரணமாக ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட  நோயாளி உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும்  அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருவதால் நெல்லை மாநகராட்சி முழுவதுமாக சாலையில் பள்ளம் தோண்டப்பட்ட குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் கடந்த இரண்டு தினங்களாக நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளன. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மறுபுறம் பொங்கல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பனி மூட்டத்தால்… 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 8 பேர்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருக்கு சொந்தமான டாட்டா சுமோ பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை நோக்கி இன்று அதிகாலை 4 மணி அளவில் எட்டு பேருடன் வந்து கொண்டிருந்தது. அப்போது பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டாட்டா சுமோ 250 அடி பள்ளத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் பயணம் செய்த அனைவரும் படுகாயமடைந்தனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடும் குளிரால்…. வார்னிஷை நெருப்பில் ஊற்றி… குளிர் காய்ந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்… நீலகிரியில் பரபரப்பு….!!

வார்னிஷை தீயில் ஊற்றி குளிர் காய்ந்ததில் மூச்சு திணறி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இயல்பு நிலையைக் காட்டிலும் கடும் குளிர் நிலவி வருகிறது.அதன் காரணமாக அம்பிகாபுரத்தை சேர்ந்த கஜபதி என்பவர் தனது உறவினர்கள் கலாவதி, மகேந்திரன் ஆகியோருடன் சேர்ந்து வீட்டிற்குள் தீயை மூட்டி குளிர் காய்ந்துள்ளார். அத்துடன் அவர் தீ நன்றாக எரிய வேண்டும் என்பதற்காக அவர் நெருப்பில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகரில் கொரோனா…. 7 பேர் பாதிப்பு…. அதிகரித்த எண்ணிக்கை…!!

விருதுநகரில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கோரோனவால் பாதிக்கப்பட்டு 16,517 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்கள். இதில் 72 ஆயிரத்து 757 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெறுவோர் 99 பேர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்த படவில்லை. இதனிடையே மேலும் ஏழு பேருக்கு நேற்று புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,252 ஆக உயர்ந்துள்ளது. 1708 பேருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திருடப்பட்ட இருசக்கர வாகனம்…. போலீஸின் அதிரடி விசாரணை…. சிக்கிய திருடர்கள்…!!

சேத்தூர் அருகே இருசக்கர வாகனங்களை திருடிய நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் பகுதியில் உள்ள சேத்தூர் என்னும் இடத்தை சேர்ந்தவர் முத்துசாமி. சொக்கநாதன்புத்தூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர்கள் இருவருக்கும் சொந்தமான இரண்டு சக்கர வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காணாமல் போனது. இதனையடுத்து  சேத்தூர் போலீஸ் நிலையத்தில் இதுபற்றி அவர்கள் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து  போலீசார் நடத்திய விசாரணையில் கந்தசாமி, பாலமுருகன் அருண், குமார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிற்கு… தாறு மாறாக ஓடிய லாரியால் நேர்ந்த கொடூரம்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அவினாசி சாலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் லாரி ஒன்று தாறுமாறாக ஓடியது. அந்த லாரி எதிரே வரும் வாகனங்கள் மீது மோதுவது போன்று  வந்ததால் எதிரே வாகனத்தில் வந்தவர்கள் மிகுந்த அச்சத்துடன் அந்த லாரியை கடந்து சென்றனர். அப்போது அனுப்பர்பாளையம் அருகே வந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் […]

Categories
Uncategorized

எருது விடும் விழாவில்…. இடிந்து விழுந்த வீட்டு சுவர்… இடிபாடுகளில் சிக்கி சிறுமி, முதியவர் உயிரிழப்பு…!!

எருது விடும் விழாவில் சுவர் இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனஹள்ளி  கிராமத்தில் வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி நேற்று எருதுவிடும் விழா  வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. இந்த எருதுவிடும் விழாவை காண வேப்பனஹள்ளி,ஓசூர், சூளகிரி போன்ற பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்தனர். அப்போது அந்த பகுதியில் உமா சேகர் என்பவரது வீட்டு சுவரில் 15க்கும் மேற்பட்டோர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரசவத்தில் உயிரிழந்த தாய்… மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

பிரசவத்தில் தாய் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் உள்ள தொடுதேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தேவராஜ் – பவித்ரா. பவித்ரா  நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில்  கடந்த 3ஆம் தேதி  அவர் ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.அப்போது பவித்ராவிற்கு ரத்தம் குறைவாக இருந்ததால் மருத்துவர்களின்  பரிந்துரைப்படி அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின் தாயும்,சேயும்  நலமாக இருந்தனர். திடீரென்று இரவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மருந்து குடோனிலிருந்து வெளி வந்த கரும்புகை… உள்ளே சென்று பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி….!!

கோவையில் மருந்து குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உழவர் சந்தை அருகே பிரபல மருந்து கடையின் குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் மொத்தமாக வைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் இன்று அதிகாலையில் குடோனிலிருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் மளமளவென்று குடோன் முழுவதும் நெருப்பு பரவ தொடங்கியுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடோனின் காவலாளிகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல் நிலையம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட கைக்குழந்தை… சாலையை சீர் செய்த பொதுமக்கள்… கைக்கோர்த்த மனிதநேயம்…!!

ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கைகோர்த்து வழிவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய  வேண்டும் என்பதால் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட வேண்டியிருந்தது. இதற்காக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மற்றும் வெள்ளகோயில் வழியாக குழந்தை கோவை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம்  எடுத்துச் செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் செல்வதற்காக காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பொதுமக்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்,நகராட்சி ஊழியர்கள், ஆட்டோ கார் ஓட்டுநர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ண வண்ண பொங்கல் பானைகள்… அதிகளவில் விற்பனை… வியாபாரிகள் மகிழ்ச்சி….!!

சேலத்தில் பொங்கல் பானை விற்கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் வரும் 14-ஆம் தேதி தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு சேலம் குமாரசாமிப்பட்டி, கிச்சிப்பாளையம், சூரமங்கலம், அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பானை விற்பனை மும்மரமாக நடைபெற்று வருகிறது. பல வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு விதமான பானைகள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள  பானைகளின் விலை 10 விழுக்காடு முதல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“4 ஆண்டுகளுக்கு பின்” ஆசையாக பிள்ளைகளை பார்க்க சென்ற நபர்…. செருப்பால் அடித்த அத்தை…!!

நபர் ஒருவர் 4 ஆண்டுகளுக்கு பின் தனது பிள்ளைகளை பார்க்க சென்றபோது அத்தை அவமானப்படுத்தியதால் மாயமாகியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியில் வசிப்பவர் ரஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்ட பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 10 வருடங்களுக்கு முன்பு இந்த தம்பதியினருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ரஜினிகுமாரின் மனைவி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையில் வாங்காத பொங்கல் பரிசுத் தொகுப்பு… வாங்கியதாக வந்த குறுஞ்செய்தி… பொதுமக்கள் சாலை மறியல்…!!

நியாய விலைக்கடையில் வாங்காத பொங்கல் தொகுப்பு வாங்கியதாக குறுஞ்செய்தி வந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதோடு 2500 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள  நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொராசக்குறிச்சி  கிராமப்பகுதியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பூங்காக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை… காட்டுக்குள் விரட்டும் பணி தீவிரம்…!!

பூங்காவிற்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள பொள்ளாச்சி வனப்பகுதியில் மான், காட்டுமாடு, சிறுத்தை ,கரடி, காட்டு யானை போன்ற பல்வேறு விலங்குகள் வசித்து வருகிறது. இங்கு வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று ஆழியார் சோதனை சாவடி வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே நுழைந்ததால்  பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து உடனடியாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாவுக்கு சென்ற சிறுவனுக்கு… பெற்றோர் கண் முன்னே நேர்ந்த கொடூரம்… ஈரோடு அருகே பரபரப்பு…!!

கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருவிழா கடந்த ஒரு வார காலமாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் இறுதியில் நேற்று பாரியூர் கோவிலில் இருந்து புறப்பட்ட முத்து  பல்லாக்கு கோபிசெட்டிபாளையம் நகரின் மையத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்திற்கு நேற்று அதிகாலை வந்தடைந்து. ஒவ்வொரு ஆண்டும் தெப்பக்குளத்திற்கு வரும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தில் வேலை செய்த மின் ஊழியர்… திடீரென தாக்கிய மின்சாரத்தால் உயிரிழந்த பரிதாபம்….!!

திருப்பூரில் மின்சாரம் தாக்கி மின் ஒப்பந்த ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(21). இவர் திருப்பூரில் உள்ள தேவாரம்பாளையத்தில்  தங்கி திருப்பூர் மாநகராட்சியில்  கீழ் இயங்கும் தனியார் நிறுவன  ஒப்பந்ததாரரிடம் தெரு விளக்குகள் பழுது நீக்கும் பணி செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஏ. வி.எம் லேஅவுட் பகுதியில் அஜித்குமார்  மின் கம்பத்தில் ஏறி வேலை செய்து  கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில்  அவர் தூக்கி வீசப்பட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க மொபட்டில் சென்ற தம்பதியர்… பலமாக மோதிய கார்… பின்னர் நேர்ந்த துயரம்….!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம்  பகுதியை சேர்ந்த தம்பதியினர் ராமலிங்கம்(70)- மீனாட்சி(65). இத்தம்பதியரின்  மகளின் வீடு கரூர் மாவட்டத்திலுள்ள ஆவாரங்காட்டுப்புதூரில் உள்ளது. இந்நிலையில் மகளை  பார்ப்பதற்காக ராமலிங்கமும் அவரது மனைவி மீனாட்சியும் மொபட்டில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர் . நொய்யல் அருகே சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆவாரங்காட்டுப்புத்தூர் பிரிவு வந்து கொண்டிருந்த போது வலதுபுறமாக ராமலிங்கம் தனது மொபட்டை  திருப்பியுள்ளார். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபோதையில் ரயிலில் தூங்கிய பெண்…. பின்னர் நடந்த அதிர்ச்சி…!!

மின்சார ரயிலில் தூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தில் மின்சார ரயிலில் தூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டை அடுத்த பரனூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் குடிபோதையில் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் ஏறியுள்ளார். இதையடுத்து அவர் ரயிலில் நன்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அது நள்ளிரவு நேரம் என்பதால், தாம்பரம் பணிமனையில் தற்காலிக ஊழியர்கள் சுரேஷ், அப்துல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நாசா செல்ல இருக்கும் ஏழை மாணவியின்…. “ஒரு வேண்டுகோள்” நிறைவேறியதால்…. பாராட்டிய கிராமம்…!!

நாசா செல்ல இருக்கும் ஏழை மாணவி ஒருவர் தனது பொதுநலத்திற்காக மக்களின் பரட்டை பெற்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் மாணவி ஜெயலட்சுமி(16). இவர் ஏழ்மையான குடும்பத்தில் சார்ந்தவர் என்பதால் அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். மேலும் இவர் சர்வதேச தேர்வில் கலந்துகொண்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் கடந்த வருடம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மாணவி ஜெயலட்சுமி காலையில் தன் வீட்டு வேலையை முடித்துவிட்டு பள்ளிக்கு செல்வது வழக்கம். பள்ளி முடிந்த பிறகு கூலி வேலைக்கு சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“சாமி கும்பிட்டு வாரோம்” கோவிலுக்கு சென்ற குழந்தைகள்…. பின்னர் நடந்த துயரம்…!!

குழந்தைகள் இருவர் கோவிலுக்கு சென்றபோது குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் வசிப்பவர் முத்து. இவர் மகள் கீர்த்தனா ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் அதே பகுதியை சேர்ந்த கேசவன் என்பவரின் மகள் மகாலட்சுமி. இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் அதில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து வெகுநேரமாகியும் குழந்தைகள் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களின் பெற்றோர் பல இடங்களில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“வீட்டிலேயே பிரசவம்” அலட்சியத்தின் உச்சக்கட்டம்…. அழுகி பிறந்த குழந்தை…. கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்…!!

கர்ப்பிணி ஒருவர் வீட்டில் பிரசவம் பார்த்தபோது உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பட்டியில் வசிக்கும் தம்பதிகள் விஜயவர்மன்- அழகம்மாள். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அழகம்மாள் கர்ப்பம் தரித்துள்ளார். இதையடுத்து விஜயவர்மன் அண்ணன் விக்கிரமராஜா அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்து வந்ததால் அழகமாளுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார் .அதற்கு அவருடைய பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவமனைக்கு சென்றால் அங்கு கொடுக்கும் மாத்திரை, மருந்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“குறைஞ்ச விலையில வீடு கட்டி தர்றேன்” என்று கூறி… ரூ.6 1/2 கோடி மோசடி… கட்டுமான நிறுவன உரிமையாளர் கைது….!!

குறைந்த விலையில் வீடு கட்டி தருவதாக கூறி 6 1/2 கோடி ரூபாய் மோசடி செய்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரை காவல்துறயினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அமராவதி நகரை  சேர்ந்த தம்பதியினர் பரமசிவம் – மஞ்சுளா. மஞ்சுளா பவானியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 18 ம் தேதி ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  மோசடி புகார் ஒன்று அளித்தார். அப்புகாரில், “ஈரோடு மாவட்டம் தாசம்பாளையம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடியிருப்புகளுக்குள் புகுந்த சிறுத்தை… அச்சத்தில் பொது மக்கள்….!!

உதகமண்டலத்தில் குடியிருப்புகளுக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளிலிருந்து சிறுத்தை, புலி ,காட்டெருமை போன்ற வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் உதகமண்டலத்தில் மையப்பகுதியான கமர்சியல் சாலை பகுதியில் கடந்த சில நாட்களாக  நாய்கள் தொடர்ந்து  காணாமல் போயுள்ளது. காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு  கேமராவில்  பார்த்தபோது சிறுத்தைப்புலி ஒன்று நள்ளிரவில் குடியிருப்புகளுக்குள்  புகுந்து உதகை நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்து செல்வது பதிவாகியுள்ளது. இதைப்பார்த்த காவல்துறையினர் வனத்துறையினருக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்… பலமாக மோதிய வேன்… பின்னர் நடந்த துயரம்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணி(26). சூளகிரி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(24). இருவரும் நண்பர்களாக உள்ளனர். இந்நிலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் உத்தனப்பள்ளியிலிருந்து கெலமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன்  இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முதியவர்… மனமுடைந்து… எடுத்த விபரீத முடிவு…!!

உடல்நிலை சரியில்லாததால் முதிவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசாகவுண்டனுரை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் முழங்கால் வலி மற்றும் ஒரு கை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் மனவேதனையடைந்த லட்சுமணன் கடந்த 2ஆம் தேதி வீட்டில் இருந்த குருணை மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் லட்சுமணனை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் சேலம் அரசு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பேரனின் மருத்துவ செலவுக்கான பணத்தை… தவற விட்ட முதியவர்… பணத்தை மீட்டு ஒப்படைத்த காவல்துறையினர்…!!

 நீலகிரி அருகே பணப்பையை தவற விட்ட முதியவரிடம் காவல்துறையினர் ஓப்படைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு பை  கிடந்ததுள்ளது. அந்த பையை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜகுமாரி என்ற பெண் காவலர் கண்டெடுத்துள்ளார்.  பின்னர் அதற்குள் பார்த்தபொழுது  2,27,000 ரூபாய்  இருந்ததுள்ளது. ஆனால் அதை தவற விட்டு சென்ற நபர் யார் என்று தெரியவில்லை. இது குறித்து தகவலறிந்த ஊட்டி நகர மேற்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பாய் பிரண்டு தான் வேணும்” மனைவி கூறியதால்…. வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு…. தற்கொலை செய்த கணவர்…!!

கணவர் ஒருவர் தனது மனைவி ஆண் நண்பருடன் வாழ போவதாக கூறியதால் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் நாகாத்தம்மன் கோவில் அருகே‌ வசித்து வரும் தம்பதிகள் பாண்டியராஜன் (27) – சித்ரா (21). இவர்களுக்கு 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகின்றது. பாண்டியராஜன் லோடுமேனாக வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி பனியன் கம்பெனியில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனைவியின் திருமணத்தை மீறிய உறவால்… மனமுடைந்து… கணவன் எடுத்த விபரீத முடிவு…!!

திருப்பூரில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டியராஜன்- சித்ரா. இத்தம்பதியருக்கு  ஐந்து வயதில் குழந்தை உள்ளது. பாண்டியராஜன் சுமை தூக்கும் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி சித்ரா பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  சித்ராவுக்கும் ராக்கியபாளையத்தை சேர்ந்த அருண் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததை பாண்டியராஜன் அறிந்துள்ளார் . இதனால் அவர் மனைவியை கண்டித்துள்ளார். எனினும் சித்ரா […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்… லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த பரிதாபம்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியை சேர்ந்த தம்பதியினர் ராஜேந்திரன்-சுமதி. தம்பதியர் இருவரும் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஓமலூரில் இருந்து செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி  தம்பதியர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சுமதியும், ராஜேந்திரனும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்தவர்கள் உடனடியாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

படிச்சு முடிச்சுட்டு வேலை இல்லையா… அரசு உதவி தொகை கிடைக்கும்… உடனே அப்ளை பண்ணுங்க…!!

படித்து முடித்து வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் அரசு வழங்கும் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் படித்த வேலைவாய்ப்பற்றோர்  கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.  படித்த வேலைவாய்ப்பற்றவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூபாயும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாயும்  பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு 400 ரூபாயும் பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஏய் காட்டுக்குள்ள போ இங்கலாம் வரக்கூடாது”… வனத்துறை ஊழியரின் பேச்சை கேட்டு… திரும்பி சென்ற காட்டு யானை…!!

குடியிருப்புக்குள் புகுந்த யானை வனத்துறை ஊழியரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வனப்பகுதிக்குள் திரும்பி செல்லும் காட்சி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் உள்ள வால்பாறை பகுதியில் சிறுத்தை, யானை, காட்டு மாடு,கரடி  என அதிக அளவில் வனவிலங்குகள் உள்ளது. சில நேரங்களில் வன விலங்குகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவதும் உண்டு. இந்நிலையில் கடந்த வாரம் தேயிலை தோட்டத்தில் காட்டு யானை தாக்கி பெண்  ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வால்பாறை வனச்சரகர் தலைமையில் வனத்துறையினர் விலங்குகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது மோதிய அரசு பேருந்து… மகள் கண் முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம்… திருப்பூர் அருகே பரபரப்பு…!!

ஸ்கூட்டர் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள பாலக்காட்டைச் சேர்ந்தவர் மாசித் . இவரது மனைவி ஸ்ருதி. இத்தம்பதியருக்கு ஆதிரா என்ற குழந்தை உள்ளது. மாசித்  திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதி தனது தாய் சந்திரிகா மற்றும்  தனது மகள் ஆதிராவுடன் ஸ்கூட்டரில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள துணி கடைக்கு சென்றுள்ளார். பின்னர் துணிக்கடைக்கு சென்று விட்டு மூவரும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் பறிபோன 7,64,000 ரூபாய்… மன உளைச்சலில்… இளைஞர் எடுத்த விபரீத முடிவு…!!

திருப்பூரில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எல்வின் பிரட்ரிக். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகப்படியான ஆர்வமிருந்துள்ளது. இதனால்  அதிகளவு பணத்தை சூதாட்டத்தில் விளையாடி இழந்துள்ளார்.மேலும்  தமிழ்நாடு அரசு இணையதளம் சூதாட்டத்தை தடை செய்த பிறகும் சட்டவிரோதமாக அதை பதிவிறக்கம் செய்து விளையாடி உள்ளார். இதில்  கடந்த 4ஆம் தேதி வரை சுமார்  7 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்…. விபத்தில் பலி…. அதிகாலையில் சோகம்…!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அதிகாலையில் விபத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே விருத்தாசலம் செல்லும் சாலையில் கார் ஒன்று அதிகாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அங்கு இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த பிரியா(43) அவருடைய மகன் அபிஷேக்(16) ஆகிய இருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதையடுத்து பிரியாவின் கணவர் சௌந்தர்ராஜன் மற்றும் மகள் ஈஸ்வந்தினி(18) ஆகிய இருவரும் படுகாயமடைந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொடரும் அவலம்…. ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால்…. வாலிபர் தற்கொலை…!!

  ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வசிப்பவர் எல்வின். இவர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஆன்லைன் விளையாட்டில் மிக ஆர்வமாக இருந்துள்ளார். இதையடுத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்த இவர் தொடர்ந்து பணத்தை இழந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 4ஆம் தேதி வரை 7 லட்சத்து 64 ஆயிரம் வரை பணத்தை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மகள்… கல்லூரியில் சேர்க்க காரில் சென்ற குடும்பத்தினருக்கு… நேர்ந்த துயரம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற மரம் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சவுந்தர்ராஜன்(45)- பிரியா(43). இத்தம்பதியருக்கு அபிஷேக்(16) என்ற மகனும் எஸ்வந்தினி(18) என்ற மகளும் உள்ளனர்.எஸ்வந்தினி தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் அவரை  நாமக்கல்லில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்காக குடுபத்தினர் அனைவரும் நாமக்கல் நோக்கி காரில் சென்றுள்ளனர். அப்போது   […]

Categories
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

பழுதாகி நின்ற லாரி மீது மோதிய கார்… ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு… திருப்பூர் அருகே பரபரப்பு….!!

லாரி  மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவர் தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூருக்கு  காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காங்கேயம் சாலையில் லாரி ஒன்று பழுதாகி நின்றது. லேசான மழை பெய்து கொண்டிருந்ததால் அதிகாலை நேரத்தில் அவ்வழியே  காரை ஓட்டி வந்த மயில்சாமி லாரியின் பின் பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளார். இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“கூடா நட்பு கேடாய் முடிந்தது”… தொழிலாளியை கொலை செய்த நண்பர்கள்… 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!!

தொழிலாளியை கொலை செய்த நான்கு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜித்(20). இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில்  கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி அஜீத் தனது நண்பர்களான ஜெகதீசன், ராஜேஷ் , பிரபு  மற்றும் சவுந்தரராஜன்ஆகியோருடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதை அஜித்தின் மனைவி குணசுந்தரி தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு… சிக்கிய சிசிடிவி காட்சிகள்…!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமகவுண்டம்பட்டியில் காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறும். மாதந்தோறும் அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில்  சிறப்பு பூஜைகளும் நடைபெறும். திருவிழாவிற்கு முன்பாக உண்டியலை திறந்து அதில் கிடைக்கும் தொகையை கோவில் கணக்கில் சேர்ப்பதை அக்கிராம மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் பயணித்த விமானத்தில்… முதல் முறையாக தமிழில் அறிவிப்பு செய்த விமானி… முதலமைச்சர் பாராட்டு…!!

விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்த விமானியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டிய சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து வரலாறு படைக்கும் நோக்கில் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் பரப்புரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நிகழ்ச்சிகளை முடித்து விட்டு நேற்று மீண்டும் சேலத்திலிருந்து சென்னைக்கு திரும்பினார். அப்போது அவர் சேலம் விமான நிலையத்திலிருந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவன்… தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகள்… மறுவாழ்வு பெற்ற 7 பேர்…!!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மகன் ரோகித்கண்ணா(17). இவர் கடந்த 31ஆம் தேதி பொள்ளாச்சி பல்லடம் சாலையில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து  ரோகித்கண்ணா கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் மூளைச்சாவு அடைந்தார். தன்னுடைய மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் மற்றவர்கள் இந்த உலகில் வாழலாம் என்று கருதிய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மளிகை கடையின் பூட்டை உடைத்து… 53,000 ரூபாய் கொள்ளை… அச்சத்தில் வியாபாரிகள்…!!

மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் வெங்கடாசலம். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் வெங்கடாசலம்  இரவு  வேலையை  முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். வழக்கம் போல் இன்று  கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையிலிருந்த 53 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணத்தை மீறிய உறவு… கண்டித்த மனைவி… ஓய்வு பெற்ற ஆய்வக உதவியாளர் எடுத்த முடிவு…!!

கோவையில் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் முதியவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்.இவர்  தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியத்துக்கு  அப்பகுதியில் உள்ள இரண்டு பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை பாலசுப்பிரமணியத்தின்  மனைவி கண்டித்துள்ளார். மேலும் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு ஈரோட்டில் உள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மண்ணெண்ணெய் விளக்கை பற்ற வைத்த மூதாட்டி… மளமளவென்று பற்றிய நெருப்பு…!!

கோவையில் தீயில் கருகி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சீலக்காம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி சாயம்மாள்(85). சம்பவத்தன்று இவரது வீட்டில் திடீரென மின்சார நிறுத்தம்  ஏற்பட்டது. அப்போது சாயம்மாள்  மண்ணெண்ணெய் விளக்கை பற்ற வைத்துள்ளார். மண்ணெண்ணெய் விளக்கிலிருந்து வந்த தீ எதிர்பாராதவிதமாக இவரது சேலையில் தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென்று அவரது உடல் முழுவதும் நெருப்பு பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் திடீரென்று கேட்ட சத்தம்… வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில்… தொழிலாளி உயிரிழப்பு…!!

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள ஹரிபுரத்தைச் சேர்ந்தவர் பட்டிலிங்கம் . இவருடைய மகன் ராஜசேகர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராஜசேகர்  கூலி தொழில் செய்து வரும் நிலையில் தனது தாய் சரஸ்வதியுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று ராஜசேகரும் சரவதியும் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென்று இவரது வீட்டின் மண் சுவர் மேற்கூரையுடன்  இடிந்து விழுந்தது. இதில் ராஜசேகரும் அவரது தாய் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் தலையை வெளியே நீட்டி பயணித்த பெண்… சரக்கு வாகனம் மோதி உயிரிழந்த பரிதாபம்…!!

ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி கீதா. நேற்று காலையில் இத்தம்பதியர் பயணிகள் ஆட்டோவில் பேரூரில் இருந்து காளம்பாளையம்  நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். ஆட்டோ பச்சாபாளையம் பிரிவு அருகே சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம் ஆட்டோவை உரசியபடி சென்றது. இதில் ஆட்டோவில் தலையை வெளியே நீட்டி உட்கார்ந்திருந்த கீதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப நாளாவே உடம்பு சரியில்ல… வாழ்க்கையில் விரக்தியடைந்து… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

திருப்பூரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபு(25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரேவதி(23) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் திருப்பூரில் உள்ள ஜி.என் கார்டன் பகுதியில் வசித்து வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில்  தம்பதியர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ரேவதி உடல்நிலை சரியில்லாமல் மிகவும்  அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரையாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால்… மனமுடைந்து… சிறுவன் செய்த செயல்…!!

கோவையில் பள்ளி  மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவருடைய  மகன் பவுல் ரோஷன்(15). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் ஆன்லைன் மூலம் ரோஷன் பாடம் படித்து வந்தார். இந்நிலையில்  நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் அவர் எதிர்பார்த்ததை விட குறைவான  மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதனால் கடந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இரும்பு சத்து மாத்திரையை உட்கொண்ட 1 1/2 வயது குழந்தை… தீவிர சிகிச்சை மூலம் உயிர்பிழைப்பு…!!

விளையாடும் போது அதிக அளவு மாத்திரையை உட்கொண்ட குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்  குமரேசன்- கனிமொழி.இத்தம்பதியருக்கு  ஒன்றரை வயதில் பவ்யா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது குழந்தையை வீட்டில் விளையாட வைத்துவிட்டு கனிமொழி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை வீட்டில் இருந்த இரும்பு சத்து மாத்திரையை எடுத்து அதிக அளவில் சாப்பிட்டுள்ளது. இதனால் குழந்தை சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தது. இதை  பார்த்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வரியை குறைவாக நிர்ணயம் செய்ய… லஞ்சம் வாங்கிய “வரி வசூல் அலுவலர்”… கைது செய்த காவல்துறையினர்…!!

கோவையில் லஞ்சம் வாங்கிய வரி வசூல் அலுவலர் மற்றும் அவரது உதவியாளரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையில் உள்ள சுந்தராபுரத்தில் மாநகராட்சி வரிவசூல் மையம் உள்ளது. இங்கு வரிவசூல் அதிகாரியாக கவுஸ் மொய்தீன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் செந்தில் குமார் என்பவரிடம் வீடு அதிக பரப்பளவில் கட்டப்பட்ட இருப்பதாக கூறியுள்ளார். இதனால் வீட்டின் வரியை  குறைவாக நிர்ணயம் செய்ய 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று […]

Categories

Tech |