சப்-இன்ஸ்பெக்டர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வீரசோழன் காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பையா நேற்று காவல் நிலையத்திற்கு எதிரே இருக்கும் கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்ப வராததால் சந்தேகமடைந்த சக போலீசார் அங்கு சென்று பார்த்த போது கரையில் கருப்பையாவின் சட்டை, செல்போன் ஆகியவை இருந்தது. […]
