கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் இருப்பவர்கள், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழில் செய்பவர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், மற்றும் குரு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர் ஆகியோர் பயன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற 1 கோடி ரூபாய் வரையிலான திட்ட தொகை கொண்ட […]
