தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு தாலுகாவிற்குட்பட்ட எடத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, மாரி, தீபா, ருக்மணி, ரேகா, பரிமளா உள்ளிட்டோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, சென்ற 2021 ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் எங்கள் பகுதியில் சுமார் 350 பேரிடம் 500, 200 முறையில் 10 மாதங்கள் என்ற அடிப்படையில் […]
