ஆலங்குடியில் பயனாளிகளுக்கு 5 1/2 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையம் கட்டப்பட்டதை தொடர்ந்து இதன் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பங்கேற்று திறந்து வைத்தார். இதை அடுத்து ஆட்சியர் பேசியதாவது, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மன்னார்குடி வட்டாரத்தில் 51 கிராமம் ஊராட்சிகளிலும் வலங்கைமான் […]
