கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு மானியத்துடன் கடன் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு தேசிய பட்டியலினத்தவர் நிதி மற்றும் மேம்பாட்டுக்கழக நிறுவனத்தால் மானியத்துடன் குறைந்த வட்டியில் கடன் திட்டத்தை மாவட்ட ஆட்சியரான மதுசூதன் ரெட்டி அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் 1 – 5 லட்சம் வரை கடன் பெற்றுக் குறைந்த வட்டியில், அதாவது 6.5% […]
