தமிழகத்தில் 34 மாவட்டங்களை பாதித்துள்ள கொரோனாவால் 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த ஒருவர் இன்று மரணமடைந்துள்ள நிலையில் இன்று 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். 39,041 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 58,189 பேர் 28 நாள் தனிமை முடிந்தவர்களாக உள்ள நிலையில் 162 பேர் தனி வார்டில் […]
