Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முந்திரி தோப்பில் அதிமுக பிரமுகர் சடலம் மீட்பு…. நடந்தது என்ன…?? போலீஸ் விசாரணை…!!!

அதிமுக பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கிருப்பு மேற்கு தெருவில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதிமுக பிரமுகரான கோவிந்தராசு(48) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் முந்திரி தோப்பில் கோவிந்தராசு சடலமாக கிடந்ததை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கோவிந்தராசுவின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. பள்ளிக்கு விரைந்த போலீசார்…. 12-ஆம் வகுப்பு மாணவர் கைது….!!!!

போதை சாக்லேட் விற்பனை செய்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநறுங்குன்றம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவன் போதை சாக்லேட்டுகளை விற்பனை செய்வதாக போலிருக்கிற ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்திய போது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சக நண்பர்களுக்கு போதை சாக்லேட்டுகளை விற்பனை செய்தது உறுதியானது. கல்லூரி மாணவர்களும் அந்த மாணவரிடம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையின் குறுக்கே வந்த நாய்…. பள்ளத்தில் கவிழ்ந்த மினி லாரி…. கோர விபத்து….!!!

மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். மதுரை மாவட்டத்திலிருந்து மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை அழகர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் விளாம்பட்டி பள்ளிவாசல் பகுதியில் சென்ற போது சாலையின் குறுக்கே திடீரென நாய் வந்தது. இதனை பார்த்த அழகர் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி நாய் மீது மோதி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

30-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற சிறுமி…. புற்றுநோயால் பறிபோன உயிர்… பெரும் சோகம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல்கொட்டாய் பகுதியில் சகாதேவன்- லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், சத்யா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் சத்யா 5- ஆம் வகுப்பு படிக்கும் போதே பல்வேறு தடகள போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஐந்தாயிரம் மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்ட சத்யா மாநில அளவில் 7-வது இடம் பிடித்து சாதனை படைத்தார். இவர் 30-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுவரில் போடப்பட்ட துளையில் சிக்கி விடிய விடிய தவித்த நாய்….. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் லட்சுமிபுரத்தில் தெரு நாய் சுற்றி திரிந்தது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பிரதாப் என்பவரின் வீட்டிற்குள் தெருநாய் நுழைந்தது. இதனை அடுத்து வெளியே செல்வதற்கான வழியை தேடிய போது சுற்றுசுவரில் இருந்த துளை வழியாக வெளியே சென்று விடலாம் என நினைத்து நாய் தலையை நுழைத்தது. ஆனால் துளையில் சிக்கிக் கொண்டு நாயின் தலை சுவருக்கு வெளியேவும், உடல் சுவருக்கு உள்ளேயும் இருந்தது. இதனை அடுத்து தலையை வெளியே எடுக்க பலமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் வளர்த்த செடிகள்….. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. சோதனையில் தெரிந்த உண்மை…!!!

கஞ்சா செடி வளர்த்த குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்டன்விளை பகுதியில் இருக்கும் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று வீடு வீடாக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 200 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“உனது பெற்றோரிடம் பணம் வாங்கி வா” ஆபாசமாக திட்டி தாக்கிய கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென் கீரனூர் கிராமத்தில் பெரியசாமி(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணம் ஆன நாள் முதல் வரதட்சனை கேட்டு பெரியசாமி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் உனது பெற்றோர் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வா எனக் கூறி பெரியசாமி உஷாவை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த பெற்றோர்…. 3 சிறுவர்களின் சடலம் மீட்பு…. பரபரப்பு சம்பவம்….!!#

தண்ணீரில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தவிட்டுப்பாளையம் பழனியப்பா வீதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதுடைய நந்த கிஷோர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நந்த கிஷோரும் அதே பகுதியில் வசிக்கும் சிபினேஷ்(10), ராகவன்(10) ஆகிய சிறுவர்களுடன் தாமரை குட்டை என்ற இடத்திற்கு சைக்கிளில் சென்று கல்குவாரி குட்டையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் மூன்று சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கினர். இந்நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஆதார் கார்டு எடுத்து வருகிறேன்” கல்லூரி மாணவி மாயம்….. போலீஸ் வலைவீச்சு….!!!

காணாமல் போன கல்லூரி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி ஏமாகவுண்டனூர் சேக்கன்துறை பகுதியில் தர்மேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வர்ஷினி(19) என்ற மகள் உள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் கல்லூரி கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக வர்ஷினிக்கு காரைக்குடியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த பெற்றோர் வர்ஷினியை கண்டித்துள்ளனர். இந்நிலையில் ஆதார் கார்டு எடுத்து வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. மளிகை கடை உரிமையாளர் பலி…. கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மளிகை கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெஞ்சுக்காளிபாளையம் பகுதியில் சங்கரன்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளப்பட்டி பிரிவு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சங்கரன் சின்னதாராபுரத்திற்கு சென்று விட்டு மீண்டும் கடைக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஒத்தமாந்துறை அருகே சென்ற போது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதல் விவகாரம் காரணமா…..? வாலிபரின் அவசர முடிவால்….. கதறி அழும் குடும்பத்தினர்….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலு மூடு பகுதியில் கனகராஜ்-அனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கனகராஜ் இறந்து விட்டதால் அனிதா தனது மகன்களான அல்ஜின் ஷால்(22), ஆண்ட்ரோ ஷால் ஆகிருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவத்துறையில் ரேடியாலஜி பிரிவில் டிப்ளமோ படித்து முடித்த அல்ஜின் ஷால் வேலை கிடைக்காததால் தற்போது கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உடனுக்குடன் அறியலாம்” நடமாடும் உணவு பரிசோதனை கூடம்…… அதிகாரிகளின் தகவல்….!!!

தமிழகத்திற்கு இரண்டு நடமாடும் உணவு பரிசோதனை கூடங்கள் இந்திய உணவு பாதுகாப்பு தரங்கள் ஆணையம் மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒரு நடமாடும் உணவு பரிசோதனை கூடம் ஒரு மாதம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று உணவு பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உணவு பரிசோதனை செய்யப்படும் முறை, உபகரணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார். இந்த வாகனம் மூலம் காலாவதி தேதி, உணவின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தம்பதி….. வாலிபர்கள் செய்த காரியம்….. போலீஸ் அதிரடி….!!!

வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை அருகே இருக்கும் பாம்பாலம்மன் கோவிலுக்கு திருச்சியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் பழனியப்பன் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தம்பதியை வழிமறித்தனர். இதனை அடுத்து அந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி தம்பதியிடமிருந்த பணம், நகை, செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி….. கணவருக்கு நடந்த விபரீதம்….. கதறும் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வேட்டமங்கலம் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியான பிரேம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான பவித்ராவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து வந்தனர். இதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பிரேம்குமார் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கொடுமுடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சோளகாளிபாளையம் பகுதியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தப்பிற்கு துணை போவதா….??? போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்….. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!!

போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சுபவர்கள், அதனை கடத்தி விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சாராய கடத்தல்காரர்கள் மற்றும் வியாபாரிகளுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ள போலீஸ்காரர்களையும் கண்டுபிடித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் என்பவருக்கு சாராய வியாபாரிகளுடன் ரகசிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் பணத்தை வாங்கிக்கொண்டு சட்டவிரோத […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

லாரிக்கு வழிவிட்ட ஓட்டுநர்….. தலைக்குப்புற கவிழ்ந்த கார்….. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்….!!

லாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருக்கோவிலூரில் இருந்து கார் ஒன்று விழுப்புரம் நோக்கி நேற்று அதிகாலை வேகமாக சென்றது. இந்த காரை அருமலை கிராமத்தில் வசிக்கும் இளையராஜா(39) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெரும்பாக்கம் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி காரை முந்தி சொல்ல முயன்றது. இதனால் லாரிக்கு வழி விடுவதற்காக இளையராஜா காரை இடது புறமாக திருப்பிய போது நிலைதடுமாறிய வாகனம் சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பையில் இருந்த பண்டல்கள்” சோதனையில் சிக்கிய வாலிபர்….. போலீஸ் அதிரடி….!!!!

சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். தமிழக-ஆந்திர எல்லை பகுதியான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் இருக்கும் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருப்பதியில் இருந்து அரசு பேருந்து வேலூர் நோக்கி சென்றது. இந்த பேருந்தில் போலீசார் சோதனை நடத்தி சந்தேகப்படும்படியாக பையுடன் அமர்ந்திருந்த வாலிபரை பிடித்தனர். அவரது பையில் 4 பண்டல்களில் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அவர் திருப்பூரைச் சேர்ந்த கார்த்திக் என்பது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை….. ஹோட்டல்களில் திடீர் சோதனை…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!!

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 3 ஹோட்டல்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில் நகராட்சி பணியாளர்கள் பல்வேறு முக்கிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 3 ஹோட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்வதற்காக ரசம், மோர், சாம்பார் ஆகிவற்றை கட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அழித்துவிட்டனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்…. டீ குடிக்க சென்ற ஊழியர் பலி…. கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் ஆசாத் நகரில் காஜா அலாவுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னவராயன்கோட்டையில் இருக்கும் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காஜா அலாவுதீன் கடையில் டீ குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்கிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது துவரங்குறிச்சியை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் காஜா அலாவுதீனின் மோட்டார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் கவிழ்ந்த பேருந்து…. அலறி சத்தம் போட்ட பயணிகள்….. பரபரப்பு சம்பவம்….!!

அரசு பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இருந்து அரசு பேருந்து ஆனைகட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கார்த்திகேயன்(40) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் ஆறுமுகச்சாமி(47) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்த பேருந்தில் 4 பெண்கள் உள்பட 15 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் ஆலமரமேடு ஆசிரமம் அருகே சென்ற போது பேருந்தின் ஸ்டியரிங் செயல்படாமல் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கிராம சபை கூட்டம்…. வரவு-செலவு கணக்குகளை கேட்டதால் மோதல்…. பரபரப்பு சம்பவம்….!!!

கிராம சபை கூட்டத்தில் இருவர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா உலகநாதன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பிக்குமாறு ஊராட்சி மன்ற துணைத் தலைவியின் கணவர் வீரமணி என்பவர் ஊராட்சியின் கேட்டுள்ளார். அதற்கு 2-வது வார்டு உறுப்பினர் ஜெய்சங்கர் என்பவர் நீங்கள் ஏன் கணக்கு கேட்கிறீர்கள்? தேவை என்றால் ஊராட்சி மன்றத் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. துடிதுடித்து இறந்த பத்திர எழுத்தர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பத்திர எழுத்தர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் பிள்ளையார் கோவில் தெருவில் முரளி(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திரம் எழுதும் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு முரளி மோட்டார் சைக்கிளில் பெரியவிளை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த கார் முரளி வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாதியாக கிடந்த நாயின் உடல்….. நள்ளிரவில் புகுந்த சிறுத்தை….. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

சிறுத்தை நாயை கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுப்பீர்கடவு கிராமத்தில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் மல்லிகைபூ செடி பயிரிட்டு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல பூக்களை பறிப்பதற்காக செல்வம் தோட்டத்திற்கு சென்றபோது தான் வளர்த்து வந்த நாய் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நாயின் பாதி உடல் மட்டுமே கிடந்ததால் நள்ளிரவு நேரத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

4 பேரை திருமணம் செய்து மோசடி….. வாய்ஸ் மெசேஜால் சிக்கிய பெண்….. வெளியான திடுக்கிடும் தகவல்…..!!!

கமிஷனுக்காக பெண் ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாசப்பகவுண்டர்புதூரில் செல்வராஜ்- கண்ணம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கைத்தறி நெசவு தொழிலாளியான சரவணன்(35) என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணம் நடந்த பெற்றோர் முடிவு எடுத்தனர். அப்போது புரோக்கர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரிதா என்பவரை பெண் பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். சரிதாவின் தாய் தந்தை விபத்தில் இறந்து விட்டதாகவும், திருமணமான அண்ணன் கேரளாவில் இருப்பதாகவும் சரிதா கூறியுள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மர்ம விலங்கின் அட்டகாசம்…. ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ஆடுகள்….. பீதியில் பொதுமக்கள்….!!

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் ஒபிலேசன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை கொட்டகையில் அடைக்கப்பட்ட ஆடுகளை பார்த்த போது 3 குட்டிகள் உள்பட 8 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு ஒபிலேசன் அதிர்ச்சடைந்தார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்கள் மீது நம்பிக்கை….. சிறுவனுக்கு நடந்த விபரீதம்….. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மின்வெலியில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குவாகம் கிராமத்தில் கூலித்தொழிலாளியான இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார்(17) என்ற மகன் இருந்துள்ளார். 10-ஆம் வகுப்பு வரை படித்த அருண்குமார், ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடுகளை மேய்ப்பதற்காக ராமச்சந்திரன் என்பவரது தோட்டத்தில் அருண்குமார் பட்டி போட்டுள்ளார். மேலும் நாய் தொந்தரவுகளை கட்டுப்படுத்துவதற்காக அருண்குமாரும், அவரது நண்பர்களும் மின்சார வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. நேற்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதமான காலநிலை…. கோடநாடு காட்சி முனையில் குவியும் சுற்றுலா பயணிகள்….!!!

கோடநாடு காட்சி முனைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் இருக்கும் கோடநாடு காட்சி முனை முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கொடநாடு காட்சி மழை கோத்தகிரியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்திலிருந்து 6500 அடி உயரத்திலும் இருக்கிறது. இங்கு தொலைநோக்கி மூலமாக தாழ்வான பகுதியில் இருக்கும் மேட்டுப்பாளையம், பவானிசாகர் அணைக்கட்டு, தெங்குமரஹாடா, மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கண்டு ரசிக்கலாம். கடந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் வந்த தாயின் 2-வது கணவர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!

தாயின் 2-வது கணவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் 50 வயது பெண் தனது 13 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணிற்கும், ஷேர் ஆட்டோ ஓட்டுநரான முருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் கணவன் மனைவி போல […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில்….. பிரபல ரவுடி எடுத்த விபரீத முடிவு….. பெரும் சோகம்….!!!

மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பிரபல ரவுடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வரதராஜபேட்டை பகுதியில் பிரபல ரவுடியான பிரசாந்த்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த 19-ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் பிரசாந்த் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதனை அடுத்து பிரசாந்தின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறும் பெற்றோர்…!!

தண்ணீரில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மிட்டபள்ளி கிராமத்தில் சத்யராஜ்-அகிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதுடைய சுதர்சன் என்ற மகன் இருந்துள்ளான். இவர்களது வீட்டிற்கு அருகே திறந்த வெளியில் தண்ணீர் தொட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் தொட்டிக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சுதர்சன் எதிர்பாராதவிதமாக தவறி தொட்டிக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு ஊத்தங்கரை அரசு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தகராறு செய்த மகன்கள்…. ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 மகன்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரம் ஆடையூர் கிராமத்தில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுனரான சீரங்கன்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது முதல் மனைவியை பிரிந்து ராஜேஸ்வரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இருவரும் சூரப்பள்ளி சோரையான் வளவு பகுதியில் வசித்து வந்துள்ளனர். முதல் மனைவி மூலம் சீரங்கனுக்கு சரவணன்(35), ராஜ்குமார்(31) என்ற […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன்….. பெண் என்ஜினீயர் மீது தாக்குதல்….. போலீஸ் அதிரடி…!!!

திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலியை ஏமாற்றிய இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான பிரபு(33) என்ற மகன் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக பிரபுவும், தர்மபுரியைச் சேர்ந்த 21 வயது பெண் இன்ஜினியரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் கூறியுள்ளார். அதற்கு பிரபு மறுப்பு தெரிவித்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சித்ததாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மனைவி மற்றும் குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்ட நபர்….. விசாரணையில் தெரிந்த உண்மை…. பரபரப்பு சம்பவம்…!!

மனைவி மற்றும் குழந்தையுடன் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள நவலை கிராமத்தில் ரங்கீஸ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென தரையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்தி விசாரணையில் ரங்கீஸ் குமார் கூறியதாவது, நவலை கிராமத்தில் எனக்கு இருக்கும் சொந்த இடத்தில் சிறிய அளவில் பிரியாணி கடை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தங்க சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபர்கள்….. துரிதமாக செயல்பட்ட போலீசார்…. அதிரடி நடவடிக்கை….!!!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் மன்னார்குடி தெருவில் வாசு-ஜெயந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று காலை ஜெயந்தி தனது சொந்த ஊரான மா.அரசூருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் ஜெயந்தியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயற்சி செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி தாலி சங்கிலி கெட்டியாக பிடித்துக்கொண்டு திருடன் திருடன் என […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பயங்கரமாக மோதிய லாரி… கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து….!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கோரந்தாங்கல் பகுதியில் கட்டிட மேஸ்திதியான மகேந்திரன்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல் உடைக்கும் தொழிலாளியான ராஜி(42) என்பவரருடன் மோட்டார் சைக்கிளில் திருவலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் செம்பராயநல்லூர் புதூர் அருகே சென்றபோது காட்பாடி நோக்கி சிமெண்ட் வரம் ஏற்றி வேகமாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடடே…!! இரவில் பூத்த அதிசய பூ…. பார்த்து ரசிக்கும் பொதுமக்கள்….!!!

பிரம்ம கமலம் பூவை ஏராளமான பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அம்பேத்கர் தெருவில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கலைச்செல்வன் குளித்தலையில் இருந்த பிரம்ம கமலம் பூச்செடியை வாங்கினார். அதனை பூந்தொட்டியில் வைத்து கலைச்செல்வன் வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணி அளவில் செடியில் பிரம்ம கமலம் பூ பூத்தது. இதனை அறிந்த ஏராளமான பொதுமக்கள் அதிசய பூவை பார்த்து சென்றுள்ளனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மழை….. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு மண்ணொளியம்மன் கோவில் தெருவில் ஸ்ரீ சதீஷ்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் பாடி பகுதியில் இருக்கும் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான துர்கா லட்சுமி(22( என்ற பெண் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஸ்ரீ சதீஷும், துர்காலட்சுமியும் மோட்டார் சைக்கிளில் வண்டலூர்- மீஞ்சூர் 400 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதிகாலையில் வெளியே சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அலமேலுபுரம் ஜெயலட்சுமி நகர் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்துள்ளார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வெளியே சென்று வருவதாக வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு பரத் சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் வண்டிமேடு ரயில்வே கேட் அருகே இருக்கும் தண்டவாளத்தை பரத் கடந்து சென்றுள்ளார். அப்போது விழுப்புரத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

டிக்-டாக் மூலம் பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்…. நின்று போன வாலிபரின் திருமணம்…. போலீஸ் விசாரணை…!!

டிக்-டாக் மூலம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் வாலிபரின் திருமணம் நின்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே இருக்கும் கிராமத்தில் 32 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் இருக்கும் ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் மற்றொரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழ் பெண் ஒருவர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு இணையதளம் மூலம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியதாவது, டிக் டாக் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

97 1/2 லட்ச ரூபாய் மோசடி…. நிதி நிறுவன அதிபர் உள்பட 8 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

97 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக நிதி நிறுவன அதிபர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பாரதி நகரில் ராமையா(48) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2000-ஆம் ஆண்டு ராமையாவுக்கு அறிமுகமான ஒருவர் காரைக்குடி நவரத்தின நகரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பிய ராமையா தனது பணம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சேற்றில் சிக்கிய அரசு பேருந்து…. 2 மணி நேரம் போராட்டம்…. மலை கிராம மக்களின் செயல்….!!

சேற்றில் சிக்கிய அரசு பேருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் ஓடியதால் சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் ஆறுகளை கடந்து மலை கிராம மக்கள் ஊர்களுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலை கிராமம் வழியாக மாக்கம்பாளையம் வரை அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் பயணிகளுடன் சத்தியமங்கலத்தில் இருந்து புறப்பட்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆற்றை கடக்க முயன்ற முதியவர்….. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நாளாந்தெத்து கிராமத்தில் விவசாய கூலி தொழிலாளியான பாலகிருஷ்ணன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன் அப்பகுதியில் இருக்கும் வெள்ளாற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து தண்ணீரில் நீந்திய படியே மது கரையில் இருக்கும் ஆயிப்பேட்டை கிராமத்திற்கு செல்ல முயன்ற போது தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறல் ஏற்பட்டதால் பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய பேருந்து…. உயிர் தப்பிய 30-க்கும் மேற்பட்ட பயணிகள்…. போக்குவரத்து பாதிப்பு….!!

லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கேரள மாநிலத்தில் இருந்து சொகுசு பேருந்து பணிகளுடன் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இது பேருந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள விளம்பாவூர் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனரான சுதீஷ் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலன் வீட்டிற்கு சென்று தகராறு…. போலீஸ்காரரின் கையை கடித்த இளம்பெண்…. வைரலாகும் வீடியோ…!!

இளம்பெண் விசாரணைக்கு சென்ற போலீஸ்காரரின் கையை கடித்து தகராறு செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் எஸ்.பி கோவில் தெருவில் ரேவேந்திரன்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் அதிகாரியாக இருக்கிறார். இவரும் புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த இரு வீட்டாரும் கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடத்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“திருவிழாவிற்கு போக வேண்டாம்” புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மூக்கண்ட பள்ளி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் சந்திரசேகர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு வருமாறு ஐஸ்வர்யாவின் தாய் அனிதா தம்பதியினரை அழைத்துள்ளார். அதற்கு திருவிழாவுக்கு போக வேண்டாம் என சந்திரசேகர் கூறியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்தால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

லாரியை முந்தி சென்ற கொத்தனார்…. பயங்கரமாக மோதிய சரக்கு வேன்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனை பகுதியில் கொத்தனாரான ராசு(45) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை ராசு மோட்டார் சைக்கிளில் அன்னவாசல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மதியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது ராசு முன்னால் வேகமாக சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது…. வனத்துறையினரின் நடவடிக்கை…. நிம்மதியடைந்த பொதுமக்கள்…!!

சிறுமியை கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் சிக்கியது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரக்காடு பகுதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இங்கு வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 10-ஆம் தேதி அசாம் மாநிலத்தை சேர்ந்த நிஷாந்த் என்பவரது மகள் சரிதா(4) சிறுத்தை தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தாள். இதனால் வனத்துறையினர் சிறுத்தையை பிடிப்பதற்காக இரண்டு கூண்டுகளை வைத்தனர். நேற்று அதிகாலை வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் சிறுத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்றுடன் பெய்த மழை…. சாய்ந்து விழுந்த 200 ஆண்டுகள் பழமையான மரம்…. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!

பழமை வாய்ந்த மரம் சாலையில் விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் சாரல் மழை பெய்ததால் தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் சுமார் 200 ஆண்டுகள் பழமையான காட்டரசு மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-மினி வேன் மோதல்…. துடிதுடித்து இறந்த விவசாயி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மினி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குறிப்பன்குளம் நடுத்தெருவில் விவசாயியான பால்துரை(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மாயமான்குறிச்சி விலக்கு அருகே சென்றபோது பால்துரையின் மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மினி வேனும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பால் துரையை அக்கம்பக்கத்தினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறி கீழே விழுந்த வியாபாரி…. வீட்டிற்கு சென்ற போது நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மொபட்டில் இருந்து கீழே விழுந்த வியாபாரி உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் கந்தன் நகரில் தங்கவேல்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாத்திர வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரம் செய்துவிட்டு தங்கவேல் கொந்தளம் பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த தங்கவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தங்கவேல் பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories

Tech |