புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றதால் தனியார் பேருந்துகள் முழுமையாக ஓடவில்லை. ஒரு சில பேருந்துகள் மட்டுமே போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. இந்நிலையில் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்துகளில் ஏராளமான பயணம் செய்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. சிலர் கடலூரில் இருந்து புதுச்சேரி சென்ற அரசு […]
