நூதன முறையில் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் விஜயன்-ரம்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரம்யா விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஹோட்டலில் ரம்யா உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது கீழே கிடக்கும் 10 ரூபாய் நோட்டு உங்களுடையதா என்பதை பாருங்கள் என ரம்யாவிடம் ஒரு […]
