மின்சாரம் தாக்கி மேல்நிலை தொட்டி ஆபரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெருங்குளம் பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மேல்நிலை தொட்டியின் ஆபரேட்டராக பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ராஜகோபால் படவெட்டி வலசை கிராமத்தில் அமைந்துள்ள மின் கம்பத்திற்கு பீஸ் போட ஏறியுள்ளார். அப்போது திடீரென ராஜகோபாலை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ராஜகோபால் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி […]
