தம்பதியினரை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூர் பகுதியில் தட்சணாமூர்த்தி- விசாலாட்சி தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த ஜூலை மாதம் 3- தேதி மர்ம நபர்கள் இவர்களின் வீட்டிற்குள் நுழைந்து விட்டனர். அதன் பிறகு தம்பதியினரை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 45 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 1/2 வெள்ளி, 2 1/2 லட்சம் ரூபாய் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தட்சிணாமூர்த்தி காவல் நிலையத்தில் […]
