Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தெற்குப்பட்டி கிராமத்தில் பிரியா  என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பிரியாவின் தாய் லட்சுமி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரியாவின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் …. கலந்துகொண்ட பொதுமக்கள் …. சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் ….!!

கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் மருத்துவ முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள துகவூர்  கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மண்டல இணை இயக்குனர் டாக்டர் நாகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா, டாக்டர் முருகன், கால்நடை மருத்துவமனை ஆய்வாளர் பிரபாகர், பராமரிப்பு உதவியாளர் வேதவள்ளி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மருத்துவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கொண்டு வந்த தங்களது மாடுகளுக்குகளுக்கு குடற்புழு நீக்கம், சினைப் பரிசோதனை, மலட்டுத்தன்மை நீக்கம் […]

Categories
Uncategorized திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

பெரியநாயகி அம்மனுக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாணியன்குளம் பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இன்று சிவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த 108 பால்குடங்களை  கொண்டு  அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து கருவறையில் இருக்கும் அம்மன் மீது சூரிய ஒளி பரவும் அதிசய நிகழ்வு நடைபெற்றது.  அதன்பின்னர்  மாலை 6 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் …. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காதல் பிரச்சனையில்  வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் கிராமத்தில் தங்கேஸ்வரன்  என்பவர் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் தங்கேஸ்வரனுக்கும்  அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இதுக்குறித்து அந்த  பெண்ணின் பெற்றோர் தங்கேஸ்வரன்  மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கேஸ்வரன்  வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து  மயங்கிய நிலையில் இருந்த தங்கேஸ்வரனை  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல் …. வசமாக சிக்கிய தம்பதி …. போலீஸ் விசாரணை ….!!

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியில் பால்பாண்டி புஷ்பம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். இதுகுறித்து சக்கரக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அதில் அனுமதியின்றி வீடுகளில்  பட்டாசுகள் தயார் செய்தது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதலியை ஏமாற்றிய வாலிபர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

காதலன் ஏமாற்றியதால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கற்பகச்செல்வி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கற்பகச்செல்விக்கும் கரைவளந்தான்பட்டியை  சேர்ந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து கற்பகச்செல்வி தனது  பெற்றோரிடம்  கூறியுள்ளார். இதனை கேட்ட கற்பகச்செல்வியின் பெற்றோர் அந்த வாலிபரிடம்  முறைப்படி வந்து பெண் கேட்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில்  வாலிபர் வராததால் மன உளைச்சலில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இவ்வளவு காணிக்கையா?…. ஆய்வு செய்த அதிகாரிகள்…. பிரசித்தி பெற்ற கோவில்….!!

மாரியம்மன் கோவில் உண்டியலில் இருந்த பணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இந்நிலையில்  காணிக்கையாக 60 லட்சத்து 74 ஆயிரத்து 429 ரூபாய் பணம், 302  கிராம் தங்கம், 950 கிராம் வெள்ளி, ஆகியவை உண்டியலில் இருந்துள்ளது. இதில் இந்து சமய அறநிலைத்துறை உதவி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாசி மகா பிரதோஷம்…. நடைபெற்ற சிறப்பு பூஜை…. தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்….!!

பிரதோஷத்தை முன்னிட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மாதம்தோறும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதேபோல் நேற்று மாசி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பலம், பன்னீர், திருநீர், சந்தனம், தயிர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில்  காளை மாடு முட்டி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாகனேரி கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட  காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் மஞ்சிவிரட்டில் கலந்து கொண்டு  காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்  சக்திவேலை காளை மாடு  பலமாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த சக்திவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்கள் மீது வழக்கு போடுவது ஏன்?…. அ.தி.மு.க.வினர் சார்பில் நடைபெற்ற போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சண்முகராஜா கலையரங்கம் முன்பு அ.தி.மு.க.வினர் மீது வழக்கு போடும்   தி.மு .க .வினரை கண்டித்து   அ.தி.மு.க.வினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், நகர செயலாளர் என். எம். ராஜா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் கருணாகரன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் ஆசைத்தம்பி, முன்னாள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற மாசி திருவிழா …. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில்  உள்ள பகைவரை வென்றான் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு நேற்று நடைபெற்ற திருவிழாவில் மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து  கும்மியாட்டம், ஒயிலாட்டம், போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன்பின்னர்  பெண்கள் இரவு முழுவதும் கும்மி கொட்டி குலவையிட்டு கோவிலில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை ஊர் முழுவதும்  சுற்றிவந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை …. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

குடும்ப பிரச்சினையில் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ளபூலாவூரணி  பகுதியில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் காளிராஜிக்கும்  அவரது மனைவி ராஜலட்சுமிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.  இதனால் மன உளைச்சலில் இருந்த காளிராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காளிராஜியின்  தாய் வீரலட்சுமி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.  அந்த தகவலின்படி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சமமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

மான்களை பிடித்த  3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அடி அண்ணாமலை காப்பு காட்டில் சில மர்ம நபர்கள் மான்களை வேட்டையாடுவதாக  வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த  தகவலின்படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அந்த சோதனையில் மான்களை வேட்டையாடுவது உறுதியானது. இதனையடுத்து மான்களை வேட்டையாடிய பிரகாஷ், படையப்பா, தீபராஜ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள் இரண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி…. திடிரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

பட்டாசு ஆலையில் பற்றிய தீ விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் சண்முகையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  தாயில்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இருந்துள்ளது.இந்நிலையில்  நேற்று ராஜா என்பவர் பாம்பு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். திடிரென பட்டாசு வெடித்து ஆலையில் தீ பற்றியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு  அவருக்கு அளிக்கப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்னுடன் வா….. வாலிபரின் வெறி செயல் …. நிதிபதியின் அதிரடி உத்தரவு ….!!

மாணவியை கடத்திச் சென்ற  நபருக்கு  17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் ஞானகுரு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 18.5.2016-ல் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து அவர் அந்த மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனையடுத்து  மாணவியின் பெற்றோர் காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுதான் பழமையான உணவு…. நடைபெற்ற திருவிழா…. கலந்துகொண்ட பொதுமக்கள் ….!!

மகளிர் சுய உதவி குழு சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுட்டம் கிராமத்தில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. இதில் சமூக சுய உதவிக்குழு பயிற்சியாளர்  லட்சுமி, தமிழ்செல்வி, பஞ்சாயத்து தலைவர் முத்துராஜ் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள் 20-க்கும் மேற்பட்ட ‌ பல்வேறு ஊட்டச்சத்து உணவுகளை தயாரித்து விழாவில் காட்சிப்படுத்தினார். மேலும் 435 பேர்  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படி தான் செய்ய வேண்டும்…. நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்…. விதிமுறைகளை அறிவித்த போலீஸ் கமிஷனர்….!!

திருமண மண்டபத்தில் வைத்து ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்படுவது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகாசி போலீஸ் சூப்பிரண்ட் பாபு பிரசாந்த், பட்டாசு, தீப்பெட்டி, ஆலை ஆய்வுத் தனி தாசில்தார் ஸ்ரீதர், வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி அமீர் கோயல், பட்டாசு ஆலை உரிமையாளர் சங்க நிர்வாகி கணேசன், கண்ணன், ஆசைத்தம்பி, இன்ஸ்பெக்டர் சிவகுமார், மலையரசி, பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி, மற்றும் 200-க்கும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மாட்டுவண்டியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மண் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணல் கடத்தி வந்த வாலிபரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பொதுமக்கள் கோரிக்கை….!!

தெரு நாய்கள்  கடித்து 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  கார்ணாம்பூண்டி கிராமத்தில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்காக கட்டி வைத்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த தெருநாய் கும்பல் ஆடுகளை சரமாரியாக கடித்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு ஆண்டுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தவிட்டது. மேலும் இதுபோன்று தெருநாய்கள் அடிக்கடி ஆடு மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எப்படி விண்ணப்பிக்கலாம்?… 22 ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற ஏப்ரல் 15-ஆம் தேதி திருநங்கைகள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த திருநங்கைகளுக்கு 2022- ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைகளுக்கு  முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் விருது மற்றும் 1 லடசம் ரூபாய் பரிசு   வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற விரும்புபவர்கள் அரசு உதவி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பேசிக் கொண்டிருந்த நண்பர்கள்…. மர்ம கும்பலின் கொடூர செயல்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

ரோட்டில் நின்ற  2 பேரை  சரமாரியாக வெட்டிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மஞ்சள்குடி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான கரந்தமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான ராமமூர்த்தியுடன் சேர்ந்து அதே பகுதியில் அமைந்துள்ள  மைதானத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த சில  மர்ம நபர்கள்  கரந்தமலை மற்றும் ராமமூர்த்தி ஆகிய 2 பேரையும்  மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது யாராக இருக்கும் …. பொதுமக்கள் அளித்த தகவல் …. போலீஸ் விசாரணை ….!!

ரோட்டின் ஓரம் கிடந்த  முதியவரின்  சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம். சுப்பையாபுரம் சாலை ஓரத்தில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் தினம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு கிடைத்த மண்டைஓடுகள் எலும்புக்கூடுகளை சேகரித்து தடவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்த நபர் யார்? எப்படி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு பூஜைகள்…. கூடும் பக்தர்கள் கூட்டம்….!!

மகாசிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், திருப்புவனம் புவனேஸ்வரர்- சௌந்தரநாயகி அம்மன் கோவில், சோழபுரம் சிவன் கோவில், கள்ளல் சோமசுந்தரேஸ்வரர்- சௌந்தரநாயகி அம்மன் கோவில், களையார்கோவில், சொர்ண காளீஸ்வரர் கோவில், மாத்தூர் ஐநூற்றீஸ்வரர் கோவில், கண்டதேவி ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில், திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில், சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உடல் நிலை சரியில்லாத முதியவர் …. திடீரென எடுத்த விபரீத முடிவு …. போலீஸ் விசாரணை ….!!

ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை கிராமத்தில் அருணாசலம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  அருணாசலத்தின்  மனைவி பிரிந்து சென்று விட்டார்.  இதனால் மன உளைச்சலில் இருந்த அருணாச்சலம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருணாச்சலத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற வாலிபர் …. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து 6 3/4 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசனூர் கிராமத்தில் புகழேந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் கதவை  பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு புகழேந்தி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 6 3/4 பவுன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அய்யனார் காலனி பகுதியில் சுப்புராஜ் என்பவர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அந்த சோதனையில் கஞ்சா விற்பனை செய்தது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் சுப்புராஜ் இடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள், 22 ஆயிரத்து 500 ரூபாய் பணம், 2 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஐயோ எனக்கு வலி தாங்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தீராத வயிற்று வலியால் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டி கிராமத்தில் பாலு மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென  வயிற்றுவலி ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த பாலு மகேந்திரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலுமகேந்திரனின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பணம் கேட்ட பேரன்…. பாட்டிக்கு நேர்ந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

குடிக்க பணம் தராததால் பேரன் பாட்டியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பூசிமலைகுப்பம் கிராமத்தில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிலம்பரசன் என்ற பேரன் உள்ளார். இந்நிலையில் சிலம்பரசன் மது குடிப்பதற்காக கோவிந்தம்மாலிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இந்நிலையில்  கோவிந்தம்மாள் பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் அருகில் இருந்த இரும்பு கம்பியால் கோவிந்தமாலை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தமாலை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பேருந்தில் வந்து கொண்டிருந்த மாணவன்…. வாலிபர்களின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை….!!

கல்லூரி மாணவனை தாக்கிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்னம்பட்டி கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திதாசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சக்திதாசன் கடந்த 24 – ஆம் தேதி கல்லூரி முடித்துவிட்டு செய்யாறில் இருந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அபிஷேக், யுவராஜா ஆகிய இருவர் முன்விரோதம் காரணமாக பேருந்தில் ஏறி சக்திதாசனை  சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. போலீஸ் விசாரணை….!!

லாரி  மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  ஆயுதப்படை காவல் நிலையத்தில் மதுரையை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சமத்துவபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அலெக்ஸ்பாண்டியின்  மோட்டார் சைக்கிள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அலெக்ஸ்பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணி செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

சாலைப் பணியாளர்கள் மீது கார் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புளியபட்டி கிராமத்தில் சாலை பணியாளரான சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான கருப்பசாமி, கார்த்திகேயன், மோகன் குமார் ஆகியோருடன் சேர்ந்து விருதுநகர்- சாத்தூர் நான்கு வழிச்சாலையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் திடீரென நிலைதடுமாறி சாலை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. மாணவிகளுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மாணவிகள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆமணக்குநத்தம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துச்செல்வி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் முத்துச்செல்வி தனது தோழிகளான  அமுதா, திவ்ய பிரபா ஆகியோருடன் சேர்ந்து பள்ளி முடித்து விட்டு ஆமணக்குந்த்தம் கண்மாய் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் திடீரென முத்து செல்வியின் மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இவ்வளவு திறமையா?…. சாதனை படைத்த 5-ஆம் வகுப்பு மாணவி…. கலந்துகொண்ட நிர்வாகிகள்….!!

செந்தில்குமார் நாடார் கல்லூரியில் நோபல் சாதனை பதிவுக்கான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செந்தில்குமார் நாடார் கல்லூரியில் நோபல் சாதனை பதிவுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நோபல் சாதனை பதிவு நிறுவனம் நிர்வாகிகள், ஆட்சியாளர் மாலினி, கல்லூரி முதல்வர் டாக்டர் சுந்தரபாண்டியன், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தணியஸ்ரீ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  2 மணி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசியத் தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 20 யூனிட் மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தண்டியனேந்தல்   பகுதியில் இரவு நேரங்களில் மணல் அள்ளப்படுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மண்டல துணை தாசில்தார் கருப்பசாமி, வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம், வடக்கு புளியம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ரத்தினம், தலையாரி ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அந்த சோதனையில் அனுமதியின்றி மணல் அள்ளியது   உறுதியானது. இதனையடுத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெண்கள்தான் வலிமையானவர்கள்…. நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டம்…. கலந்துகொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது . திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லலிதாம்பாள், உமன் எம்பவர்மெண்ட்    டிரஸ்ட் நேச குமாரி, தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், சைல்டு லைன் திட்ட இயக்குனர் முருகன், அனைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏன் வழங்கவில்லை?…. விவசாய சங்கத்தினரின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…. விருதுநகரில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றுள்ளது. இன்னிலையில் கடந்த 2020- 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகை பட்டுவாடா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணி செய்து கொண்டிருந்த தொழிலாளி…. திடிரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜமீன்சல்வார் பட்டி கிராமத்தில் ரவீந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று  தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து ஆலையில் தீ பற்றியது . இந்நிலையில்  பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கதிர்வேல் என்பவர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்து பக்தர்கள்….!!

அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகிரிபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று அஷ்டமியை முன்னிட்டு வடுக பைரவருக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், புஷ்பம், தயிர், உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் ரவி குருக்கள் தலைமையில் வைரவருக்கு சந்தன அலங்காரம் செய்யப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்…. அறிவித்த அதிகாரிகள்….!!

விருதுநகர் நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 36 வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதில் முத்துராமன், முனீஸ்வரி, முத்துராமன், வெங்கடேஷ், ஆறுமுகம், ஆஷா, ராமச்சந்திரன், பஜீர் அகமது, மதியழகன், பால்பாண்டி, தனலட்சுமி, உமாராணி, குருவம்மாள், முத்துலட்சுமி, ராஜ்குமார், ரோகினி, பிருந்தா, ரம்யா, மாதவி, உமாராணி, செல்வரத்தினம், பாத்திமுத்து, ஹேமா, சுல்தான் அலாவுதீன், ஜெயக்குமார், மாலதி, ஜித்தேஷ் வரி, பேபி, மதிமாறன், இந்திரா தனபாலன், மாதவன், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆலையில் பற்றி எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் செயல்…. போலீஸ் விசாரணை….!!

கயிறு தொழிற்சாலையில்  தீ பற்றி  எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள  முகவூர் பகுதியில் நவமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசையா மணி சாலையில் கயிறு தயாரிக்கும் ஆலை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென ஆலையில் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நீங்க இன்னும் புதுப்பிக்கலையா?…. மார்ச் 1 கடைசி தேதி…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மேகநாதர் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மேகநாதர் ரெட்டி  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கடந்த 2014 to 20 19 ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் புது புதுப்பிதற்கான மறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புது’ப்பிக்க விரும்பும் பதிவுதாரர்கள் வருகின்ற மார்ச் 1-ஆம் தேதிக்குள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் இணையதளம் வாயிலாக தங்களது பழைய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெண்கள் உஷார்…. புகைப்படங்களை யாரும் வெளியிட வேண்டாம்…. போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை…!!

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற இணையதளங்களில் வெளியிட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார். அந்த  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெண்ணின் படத்தை  வெளியிட்ட நபர் விருதுநகரை சேர்ந்த முனீஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர்  முனீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெற்றி பெற்ற வேட்பாளர்கள்…. அறிவித்த அதிகாரிகள்….!!

சாத்தூர் நகராட்சியில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின்  விவரங்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் நகராட்சியில் அமைந்துள்ள 24  வார்டுகளில் உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் குறித்த விபரம் பின்வருமாறு. சுப்புலட்சுமி, செண்பகவல்லி, கார்த்திக் குமார், கணேஷ் குமார், பிரகாஷ், செல்வி, ஜெயலட்சுமி, பொன்ராஜ், பஞ்சவர்ணம், மாரி கண்ணு, தெய்வானை, பூ மாரிமுத்து, யமுனா, குருசாமி, கற்பகம், ஹேமலதா, அசோக், மாரி சிரஞ்சீவி, சுபிதா, சுப்புலட்சுமி, பேச்சியம்மாள், செல்வ குரு, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படிதான் செய்ய வேண்டும்…. நடைபெற்ற பயிற்சி வகுப்பு …. கலந்து கொண்ட வேளாண்மை மாணவர்கள்….!!

வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வெங்காயம் பயிர் அறுவடை பரிசோதனை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேல ராஜகுலராமன் கிராமத்தில் வைத்து பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் வெங்காய பயிர் அறுவடை பரிசோதனை எப்படி செய்வது என்பது குறித்து பயிற்சிக்  அளிக்கப்பட்டுள்ளது . இந்த பயிற்சி  புள்ளியல் துறை உதவி இயக்குனர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரி, கிராம […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை…!!

சட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய எந்திரங்களை அதிகாரிகள்   பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  உடையனேந்தல் குண்டாற்று படுகையில்  அனுமதியின்றி ஆற்று மணல் அல்ல படுவதாக திருச்சுழி தாசில்தார் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அங்கு தகவலின்படி துணை தாசில்தார் சிவனாண்டி மற்றும் வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அந்த சோதனைகள் சிலர் அப்பகுதியில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  அதிகாரிகளை பார்த்ததும்  மண் அள்ளி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

33 வார்டுகள் …. இவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்…. அதிகாரிகளின் அறிக்கை….!!

 33 வார்டுகளில்  வெற்றி பெற்ற பெற்றவர்களின்  விவரங்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் அமைந்துள்ள 33 வார்டுகளில்  வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விவரங்களைச் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில் லூர்து மெர்சி யா, கௌசல்யா, பாலமுருகன், ரவி கண்ணன், வளர்மதி, முத்து கிருஷ்ணகுமார், மாரியம்மாள், முரளி, சத்யா, சிவகுமார், சுகுமாரி, செந்தில்வேல், பழனி, பாலசுப்பிரமணியம், சுந்தரி, மோகன்ராஜ், செல்வமணி, தெரஸ், ராஜலட்சுமி, அனிதா, சையது ரவியா, முத்துமாரி, உமா மகேஸ்வரி, நாகராணி, ருக்குமணி, நாகஜோதி லட்சுமி, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குறுக்கே சென்ற காட்டுப்பன்றிகள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் கீழே நிலை தடுமாறி விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் விருதுநகர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த காட்டுப்பன்றிகள் திடீரென  சதீஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் குறுக்கே சென்றுள்ளது. இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெற்றி பெற்ற வேட்பாளர்கள்…. அதிகாரிகளின் அறிவிப்பு ….!!

வெற்றி பெற்றவர்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள  அருப்புக்கோட்டை நகராட்சியில் அமைந்துள்ள 36 வது வார்டில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில் நவமணி, தனலட்சுமி, நாகநாதன், ஜோதி ராமலிங்கம், டுவிங்கிள் ஞான பிரபா, மணி முருகன், சிவப்பிரகாசம், அகமது யாசின், அப்துல் ரகுமான், ஜெகநாதன், சங்கீதா, அல்லிராணி, இளங்கோ, மீனாட்சி, பாலசுப்ரமணியன், தமிழ் காந்தன், வளர்மதி, கவிதா, நிர்மலா, சுந்தரலட்சுமி, சங்கர ராஜ், செந்தில்வேல், கண்ணன், முருகானந்தம், பழனிச்சாமி, மீனா, காந்திமதி, சுசீலா […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடல்நிலை சரியில்லாத முதியவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை  மாவட்டத்தில் உள்ள புரிசை கிராமத்தில் சுப்பிரமணி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணி தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுப்பிரமணியை  அருகில் இருந்தவர்கள் வீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உனக்கு திருமணம் இப்போம் வேண்டாம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு …. சோகத்தில் குடும்பத்தினர் ….!!

திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சித்தன்ன கால்  கிராமத்தில் விவசாயியான  பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் 6  மாதம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை […]

Categories

Tech |