மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற வண்டியின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி வல்லநாட்டு கருப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரியை முன்னிட்டு மாட்டுவண்டிபந்தயம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று செம்பனூர்-சொக்கநாதபுரம் சாலையில் சின்ன மாட்டு வண்டி பந்தயம் மற்றும் பெரிய மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் கலந்து […]
