Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவில் கதவை பூட்டிவிட்டு சென்ற பூசாரி…. காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கோவில்  பூட்டை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வழங்காவயல்  கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிங்கமுகம் காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில்  இரவு  கோவில் பூசாரி  கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு  பூசாரி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கோவில் உண்டியலில் வைத்திருந்த 2 ஆயிரம்  ரூபாய் பணத்தை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசியத் தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குவலங்காட்டு  பகுதியில் அனுமதியின்றி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் பரணிதரன் என்பவர் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர்  பரணிதரனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பரணிதரனிடம் இருந்த 1/2 கிலோ கஞ்சாவை  பறிமுதல் செய்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்று வரும் பால பணிகள்…. அதிரடி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் நடைபெறும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் கல்லணை கால்வாயில் கட்டப்படும் பாலம்  மற்றும் வடவாற்றின் குறுக்கே  கட்டப்படும் பால பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதில் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர்  பாலம் கட்டும் பணியை  வரைபடம் முலம்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தாய் …. மாணவன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தாய்  கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் ஆற்றங்கரை வழி நடப்பு பகுதியில் பாபு-நதியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8-ஆம்  வகுப்பு படிக்கும் பிரித்தீஷ்  என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நதியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது சகோதரனை  பார்ப்பதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நதியா  பிரித்திசையும்  தனது தாயுடன் வந்து மாமாவை பார்த்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் பிரித்திஷ்  மாமாவை பார்க்க […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எரிவயலை கிராமத்தில் ராமகண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சேகர், பழனிவேலு ஆகியோருடன் சேர்ந்து வல்லடியார் கோவில் நடைபெற்ற  திருவிழாவிற்கு சமையல் வேலைக்கு சென்றுவிட்டு எரியவயலை கிராமத்திற்கு  மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ராமகண்ணனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமகண்ணன்,சேகர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகன் இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  பாரிவள்ளல் நகரில் சேவுகப்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  அரசி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இவர்களது  மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த  அரசி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த  அரசியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தம்பதிகள்…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டில் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழனிசாமி நகரில் கனகவேல்-சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது  வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு 2 பேரும்  அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் தங்க […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சித்தி இறந்த துக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் பாண்டி சுதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் சிறுவயதிலேயே தவறிவிட்டதால் தனது 2 சித்திகளுடன்   வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாண்டி சுதாவின்  சித்தி ஒருவர் உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டி சுதா  தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும்  மண்ணெண்ணையை  ஊற்றி   தீக்குளித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த பாண்டிசுதா […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஏன் இங்கு கடை திறக்கிங்க?…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியானபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ -மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு  பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மனு அளித்துள்ளனர். இந்நிலையில் தற்போது அதே பகுதியில் டாஸ்மாக் கடைதிறப்பதற்கான ஏற்பாடுகள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி…. திடிரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி  கீழே விழுந்த விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர்  மாவட்டத்தில் உள்ள திருவிடவாசல் கிராமத்தில் விவசாயியான மேகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரட்டை மாரியம்மன் கோவில் சாலையில்  மோட்டார் சைக்கிளில் வந்து  கொண்டிருந்தார். அப்போது திடிரென மேகநாதனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இதில் படுகாயமடைந்த மேகநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை…. மனைவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இலக்கியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமாருக்கும் அவரது மனைவி இலக்கியாவிற்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த இலக்கியா தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த இலக்கியாவை  அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஏன் செய்ய வில்லை?…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட  சம்பவம்  பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர்   மாவட்டத்தில் உள்ள சாத்தங்குடி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பல நாட்களாக சாலை வசதி, குடிநீர், மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால்  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருத்துறைப்பூண்டி-திருவாரூர் சாலையில் தேவேந்திர குல மக்கள் இயக்க மாவட்ட தலைவர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கடையை பூட்டி விட்டு சென்ற வியாபாரி…. காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கடையின் மேற்கூரையை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர்  மாவட்டத்தில் உள்ள குடவாசல் பகுதியில் சம்சுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அரிசி கடை ஒன்று வைத்து  நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி சம்சுதீன் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு  இருந்ததை கண்டு சம்சுதின்  அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை அனைவரும் தவிர்க்க வேண்டும்…. நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து எஸ். எஸ். ஐ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்  சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி,  பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில், பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது, தலைவர் சந்திரசேகர், கல்லூரி முதல்வர் ஹேமாமாலினி, தி.மு.க.வின் ஒன்றியச் செயலாளர் பூமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள்…. நேரடி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியர்  பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்  குறித்து ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், ரகுநாதன், அலுவலர்கள், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் திருமங்கலக்கோட்டை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்கள்…. நடைபெற்ற திருவிழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!

கும்பகோணத்தில் உள்ள சிவன் கோவில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களான நாகேஸ்வரன் கோவில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவில், கோட்டையூர் கோடீஸ்வரசாமி கோவில் ஆகிய கோவில்களில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 9-ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த விழாவின் முக்கிய நாட்களான  கடந்த 13-ஆம் தேதி ஓலை சப்பரமும், 15-ஆம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்…. தமிழ்நாடு விவசாய சங்கத்தினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பழைய மீன் சந்தை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட துணை செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் தேவனாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராமன், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மரக்கட்டை விழுந்து கூலி தொழிலாளி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மனேகோடு கிராமத்தில் கூலி தொழிலாளியான யோகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு  டிராக்டரில் மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென டிராக்டரில் இருந்த மரக்கட்டை ஒன்று யோகத்தின் மீது பலமாக விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த யோகத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி யோகம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியா இருக்கா?…. அதிரடி செய்த அதிகாரிகள்….!!

உணவுத்துறை அதிகாரிகள் கடைகளில் அதிரடியாக சோதனை செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியில் அமைத்துள்ள  கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள்  பயன்படுத்தப்படுவதாக  உணவு துறை அதிகாரிகளுக்கு ரகசிய  தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாஜலம், சுவாமிநாதன்,மேற்பார்வையாளர் அந்தோணி, கலைச்செல்வன், சாமி, சேகர் ஆகியோர் கொண்ட குழு  மன்னார்குடி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள்,உணவகம், வணிக வளாகம் போன்றவற்றில்  பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற தேர்திருவிழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற  அம்மன் கோவிலில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உருவாட்டி பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பத்து நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து விரதம் இருந்து வந்த  பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, காவடிகளை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற தேரோட்டம்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற கோவிலில் தேரோட்டம்  நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற நாகேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நாளான கடந்த 13 -ஆம் தேதி ஒளை சப்பரத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளிய  வீதி உலா நிகழ்ச்சியும், நேற்று திருக்கல்யாண […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் நடந்து வந்த சம்பவம்…. வசமாக சிக்கிய 3 வாலிபர்கள் … தீவிர விசாரணையில் போலீஸ்….!!

மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி செல்வதாக  காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன்  மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசன், ராஜா, சுரேஷ், பார்த்திபன், பாலசுப்ரமணியன், நாடிமுத்து ஆகியோர் அடங்கிய தனிப்படை குழு தனிப்படை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  திருவையாறு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 2 மாட்டு வண்டிகளை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இந்நிலையில் மணல் கடத்தி வந்த 2 பேரில் ஒருவர் மாட்டு வண்டியை அங்கையே  நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர்    வண்டியில் சட்டவிரோதமாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு” இங்கெல்லாம் நாளைக்கு பட்டா திருத்த முகாம் …. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் மாவட்டத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு கணினி பட்டா திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. அதைப்போல் நாளை (வெள்ளிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள பானான்வயல் கிராமம், அனுமந்தகுடி கிராமம், எஸ். வேல்ங்குடி கிராமம், உடையநாதபுரம் கிராமம், கிலங்காட்டுர் குரூப், கீழாயூர் கிராமம், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்கள் நகையை திரும்ப கொடுங்க…. மேலாளரின் செயல்…. விவசாயிகள் போராட்டம்….!!

நகையை திருப்பி  தராத கூட்டுறவு சங்கம் மேலாளரை கண்டித்து விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சின்ன கண்ணூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சங்கத்தில் கிராமத்தில் வசிக்கும் அனைத்து விவசாயிகளும் தங்களது நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்த 8 விவசாயிகள் தங்களது நகைகளை திருப்புவதற்காக வந்துள்ளனர். இதனையடுத்து  விவசாயிகள் 8 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பணத்தை கட்டிவிட்டு தங்களது  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. போலீசுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதி விபத்து போலீஸ் ஏட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு காவல் நிலையத்தில் எட்டாக அபிமன்யு என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 2- தேதி  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அபிமன்யுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. ஓய்வு பெற்றோர் நல அமைப்பினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்றோர்  நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் போஸ் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மின்வாரிய துறையில் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பான மின் வாரியத்தை பொதுத்துறையாக நீடிக்க வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்து  புதிய ஓய்வூதிய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி …. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த  வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த தர்மா என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 15 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து …. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சடையன்காடு கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று சடையன்காடு 4 வழி  சாலையில்   மோட்டார் சைக்கிளி திருப்பி  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து திடீரென ராஜாவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பொதுக்குழு கூட்டம்…. கலந்து கொண்ட உறுப்பினர்கள் …. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!

விற்பனை ஆலோசகர்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர்  மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் வைத்து நில உரிமையாளர்கள் மற்றும் விற்பனை ஆலோசகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜசேகர், பொருளாளர் முத்துக்குமார், செயலாளர் கோவிந்தராஜ், நிர்வாகி பூமிநாதன், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செயலாளர் கோவிந்தராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மன்னார்குடியில் நிரந்தரமான சார்பதிவாளர்  இல்லாததால் பத்திர பதிவுகள் தாமதமாக நடைபெறுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இது எல்லாம் நிறைவேற்ற வேண்டும்…. பெற்றோர்கள் அளித்த மனு…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

மாவட்ட கல்வி அதிகாரியிடம் மாணவர்களின் பெற்றோர்  கோரிக்கை மனு ஒன்றை  அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் அரசு பள்ளி மாணவர்களின்  பெற்றோர்கள்   கோரிக்கை மனு ஒன்றை அதிகாரிகளிடம் அளித்துள்ளனர். அந்த மனுவில் மன்னார்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் எல்.கே.ஜி.முதல் 5-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி வகுப்புகள் நடந்து  வருகிறது. இந்த வகுப்புகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மொத்தம் உள்ள 7 வகுப்புகளுக்கும் 3 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி …. கலந்துகொண்ட மாணவர்கள்…. மாத்திரையை வழங்கிய ஆசிரியர்….!!

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கட்டிமேடு கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு  குடற்புழுநீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி தலைமையாசிரியர் பாலு, ஆசிரியர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரையை வழங்கியுள்ளனர். இதனையடுத்து  பசியின்மை, ரத்த சோகை, குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வயிற்று போக்கு ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு ஏற்படும் மாணவர்கள் இந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மிஸ் பண்ணாதீங்க… லட்சார்ச்சனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம்… பிரசித்தி பெற்ற கோவில்….!!

குருபெயர்ச்சி லட்சார்ச்சனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 2 கிராம் வெள்ளி நாணயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற  ஆபத்சகாயேஸ்வரர்  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்நிலையில் குரு பகவானுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழமடவிளாகம் கிராமத்தில் கார்த்திகேயன்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு   கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரேவதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்  கார்த்திகேயன் நேற்று  வேலையை முடித்துவிட்டு திருவையாறு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த லாரி திடீரென கார்த்திகேயனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வரும்முன் காப்போம்” திட்ட முகாம்…. கலந்துகொண்ட 1,036 பேர்…. சிகிச்சை அளித்த மருத்துவர்கள்….!!

வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புலியூர் கிராமத்தில் வைத்து தமிழக அரசின் “வரும் முன் காப்போம்” திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் யூனியன் சேர்மன் சின்னையா, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் வேங்கைமாறன், ஊராட்சி மன்ற தலைவர் ரவி, சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், யூனியன் துணை சேர்மன் மூர்த்தி, கவுன்சிலர் ராமு, சுப்பையா,மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜை…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்….!!

பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர் திருக்கோவில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில்  கைலாசநாதருக்கு பால், பலம், பன்னீர், தேன், சந்தனம், மஞ்சள், திருநீர் உள்ளிட்ட 11 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற ஆட்டு கிடாய் சண்டை…. கலந்து கொண்ட பொதுமக்கள் ….!!

மந்தையம்மன் கோவில் ஆட்டுக் கிடாய் முட்டு சண்டை நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொட்டலப்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மந்தையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆட்டு கிடாய் முட்டு சண்டை நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிடாய்கள்  கலந்து கொண்டது. அதன் பின்னர் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் போட்டியை  தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய ஆட்டோ…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள் …. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது  ஆட்டோ மோதி விபத்தில் 2 வாலிபர்கள்  உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுடி அழகிரி நாதன் பேட்டை கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அய்யப்பன் கும்பகோணத்தை சேர்ந்த தனது நண்பர் கவுதமன் என்பவருடன் சேர்ந்து ஆனைகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ நிலைதடுமாறி அய்யப்பனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உலக புகழ் பெற்ற கோவில்…. பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

தஞ்சை பெரிய கோவில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது . தஞ்சாவூர் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் நந்தியெம்பெருமானுக்கு  பால், பழம், சந்தனம், தேன், தயிர், பன்னீர், திருநீர் உள்ளிட்ட பல வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?…. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது குடும்ப ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் மாதந்தோறும் 350 ரூபாய் பிடிப்பதாகவும், மருத்துவ செலவுகளுக்கு கிடைக்கும் இழப்பீடு குறைவாக உள்ளதாகவும்,எனவே இழப்பீடு வழங்க  கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை  எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத்தலைவர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் சர்வமான்ய அக்ரஹாரம்  பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  சரவணனுக்கு அவரது  குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரவணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான கபடி போட்டி…. கலந்துகொண்ட 16 அணிகள்…. பரிசுகளை வழங்கிய முன்னாள் துணைவேந்தர்….!!

மாவட்ட அளவில்  கபடி போட்டி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் வைத்து மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில்  மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடைபெற்றது. இதில் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். அதில் முதல் பரிசை எரியூர் வளையப்பட்டி அணியும், 2-வது  பரிசை குமாரபட்டி அணியும், 3-வது  பரிசை காரைக்குடி அணியும்,  4-வது பரிசை ராஜராஜன் பொறியியல் கல்லூரி அணியும் பெற்றுள்ளது. இதனையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு அழகப்பா பல்கலைக்கழக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிராமத்தின் சார்பில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!

மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டு பொதுமக்கள் மீன்களை பிடித்து சென்றுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கே.உத்தம்பட்டி கிராமத்தில் சின்ன கண்ணம்மா என்ற கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  பெய்த கனமழையால் தண்ணீர் நிறைய வந்துள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் சார்பில்  மீன்பிடி திருவிழா நடத்த  முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. இந்த திருவிழாவில் உத்தம்பட்டி கிராம மட்டும் இன்றி  அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. மாசி-பங்குனி திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

முத்துமாரியம்மன் கோவிலில்  திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி- பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் மாசி-பங்குனி  திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று மாலை காப்பு கட்டி விரதம் இருந்த திரளான பக்தர்கள் முத்தாலம்மன் கோவிலில் இருந்து  அக்கினிச்சட்டி எடுத்து ஊர்வலமாக சுற்றி முத்துமாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அதன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் இன்னைக்கி கரண்டு இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எஸ்.புதூர், உலகம்பட்டி, ஆரணிபட்டி, மாந்தாங்குடிபட்டி, நெடுவயல், கட்டுகுடிபட்டி, மேலவண்ணாரிருப்பு, ஆர்.பாலக்குறிச்சி, வாராப்பூர், குளத்துப்பட்டி, முசுண்டபட்டி, வலசைபட்டி, கரிசல்பட்டி, புழுதிபட்டி, தர்மபட்டி, செட்டிகுறிச்சி,நாகமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். மேலும் மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

OMG: மின் விளக்கால் ஏற்பட்ட விபரீதம்…. மயிலாடுதுறையில் பரபரப்பு …!!!

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடி கிராமத்தில் கூலி தொழிலாளியான ரத்தினம்- ஹேமா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு நீகன்யா என்ற 2 வயது மகள்  இருந்துள்ளார். இந்நிலையில் ரத்தினம் தனது வீட்டின் பின்புறம்  உள்ள மின் விளக்கை எரிய  வைப்பதற்காக  மின்  ஒயரை  சரி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ரத்தினத்தின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை பார்த்த அவரது மனைவி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எனக்கு வீடு கட்டி தருவியா மாட்டியா?…. மகனின் வெறி செயல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தந்தையை சரமாரியாக தாக்கிய மகனை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஓலயாம்புத்தூர்  கிராமத்தில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் தனது தந்தையிடம் வீடு கட்டித்தருமாறு கேட்டுள்ளார். ஆனால் ரத்தினம் சிறிது நாட்கள் கழித்து கட்டி தருவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தனது தந்தையை   சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரத்தினத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே இப்படியுமா பண்ணுவாங்க!!… குழு பணத்தை கையாடல் செய்த வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை …. !!!

சுய உதவிக்குழு பெண்களிடம் 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் கையாடல் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள சேரன்குளம் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயராகவன் என்ற மகன் உள்ளார்.  இவர் மன்னார்குடியில் அமைந்துள்ள  தனியார் நிதி நிறுவனத்தில் சுய உதவி குழுக்கள் மூலம் கடன் பெற்றவர்களிடம் பணம் வசூலிக்கும் பணி செய்து வந்துள்ளார். இவர் சுய உதவிக் குழுக்கள் மூலம்  கடன் பெற்ற பெண்களிடம் வசூலித்த பணத்தை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

2-ஆம் சித்தியில் கருணை மழை பொழியும் காளியம்மன் கோவில் …..நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!

காளியம்மன் திருக்கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கள்ளப்பெரம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற இரண்டாம் சித்தியில் கருணை மழை பொழியும் காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்  ஆண்டு தோறும்  திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 7-ஆம்  தேதி முகூர்த்தக்கால் நட்டு  திருவிழா தொடங்கியது. இந்நிலையில் 9-ஆம் தேதி கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், 11-ஆம் தேதி அம்மன் சக்தி கரக புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனையடுத்து அன்று  இரவு மஞ்சள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடிக்கல் நாட்டு விழா…. தொடங்கிவைத்த அமைச்சர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டு பணியை  தொடங்கி வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் செட்டியார்குளம் சீர் அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அமைச்சர்  கே.ஆர்.பெரியகருப்பன், பேரூராட்சி திட்ட இயக்குனர் ராஜா, சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் இந்தியன் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் முகமது, பேரூராட்சி தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அமைச்சர் கே.ஆர்.பெரிய […]

Categories

Tech |