Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்…. கலந்துகொண்ட கைதிகள்…. சிகிச்சை அளித்த மருத்துவர்கள்….!!!!

மத்திய ஆண்கள் சிறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில்  சிறை  சூப்பிரண்டு அப்துல்ரகுமான், பொதுமருத்துவம் மற்றும் கண், காது, மூக்கு ஆகிய  பிரிவுகளை சேர்ந்த மருத்துவர்  பிரகாஷ் அய்யப்பன், சதீஷ், சிவாஜிராவ், முனிரத்தினம், மோகன் குமார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மருத்துவர்கள் முகாமில் கலந்துகொண்ட 70-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளுக்கு உடல் முழுவதும் பரிசோதனை செய்து  […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“நீங்கள்தான் நல்ல தலைமுறையை உருவாக்க வேண்டும்” நடைபெற்ற பட்டமளிப்பு விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

 அரசு கல்வியியல்  கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர்  அரசு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் மூர்த்தி, எம். பி. கதிர் ஆனந்த், அதிகாரிகள், மாணவர்கள், பேராசிரியர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் எம்.பி  கதிர் ஆனந்த்  145 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில்  பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் பட்டம் பெறுவதை மிகவும் பெருமையாக கருதுவார்கள். எனவே நீங்கள் உங்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு வாழ பிடிக்கல” மாணவனின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்கோட்டை பகுதியில் வீரமணி-கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11-ஆம் வகுப்பு படிக்கும் விஷ்ணு  என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஷ்ணு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த விஷ்ணு  நேற்று வீட்டில் வைத்து  உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த  விஷ்ணுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“23 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட காளைமாடு” திடீரென நடந்த விபரீதம்…. பெரும் சோகத்தில் கிராம மக்கள்….!!!!

கருப்பசாமி கோவிலுக்கு சொந்தமான காளை  திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊர்குளத்தான்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கருப்பசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு  23 ஆண்டுகளுக்கு முன்பு  கிராம மக்கள்  சார்பில் மஞ்சு விரட்டு  காளை   ஒன்று வாங்கப்பட்டது .  இந்த காளை  சிராவயல், அரளிப்பாறை, கண்டிப்பட்டி, நெடு மறம், தேவபட்டு, மகிபாலன்பட்டி   உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று  உடல் நலக்குறைவு காரணமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ரயிலில் தூங்கிய ஊராட்சி மன்ற தலைவர்” வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

ரயிலில் செல்போன் திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாளையப்பட்டி பகுதியில்  ஊராட்சி மன்ற தலைவரான  கமலதாசன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் நேற்று  தஞ்சாவூருக்கு செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில்  கமலதாசன் ரயிலில் திடீரென  துங்கியுள்ளார். அப்போது ரயிலில் இருந்த  வாலிபர் ஒருவர் கமலதாசனின் சட்டைப்பையில் இருந்த செல்போனை திருட முயன்றுயுள்ளார். இதனை பார்த்த பயணிகள்  அந்த வாலிபரை மடக்கி பிடித்து  கும்பகோணம் ரயில்வே காவல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. தம்பியின் வெறிச்செயல்…. அதிரடி உத்தரவிட்ட நீதிபதி….!!!!

அண்ணனை கொலை செய்த தம்பிக்கு  ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தலையாமங்கலம் ஏத்தக்குடி கீழகுடியிருப்பு பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் என்ற அண்ணன் இருந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் கடந்த  2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ஆம் தேதி தனது மனைவியிடம் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த ராஜ்குமார் தட்டிக்கேட்டுள்ளார் . இதனால் ஆத்திரம் அடைந்த  விஜயகுமார் வீட்டில் இருந்த இரும்பு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூரில் பரபரப்பு!!…. செங்கல் சூளை உரிமையாளர் படுகொலை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

செங்கல் சூளை உரிமையாளரை கத்தியால் குத்தி  கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்குடி பகுதியில்  பிச்சைபிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை ஒன்றை   வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று  செங்கல் சூளைக்கு வந்த ரமேஷ் தான்  மறைத்து வைத்திருந்த கத்தியால்  பிச்சைபிள்ளையை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த  […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உடனடியாக அகற்ற வேண்டும்” பொதுமக்கள் அளித்த மனு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை ….!!!!

ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த கொட்டகையை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் ராஜ வீதி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கார் நிறுத்துவதற்காக தகர கொட்டகை அமைத்துள்ளார். இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் கொட்டகையை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம்  மனு அளித்துள்ளனர். இதனையடுத்து  தாசில்தார் சரண்யா ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி ஊராட்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும்” நடைபெற்ற குருபூஜை விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

குன்றக்குடி அடிகளாரின் குருபூஜை விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்றக்குடியில் வைத்து குன்றக்குடி அடிகளாரின் 27-ஆம்  ஆண்டு குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில் பேராசிரியர் சாமி தியாகராஜன், ரத்தினம், பிள்ளையார்பட்டி கோவிந்தானந்த  சாமிகள், விஞ்ஞானி பாலகிருஷ்ணன், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, சுப்பையா, சுந்தர் ஆவுடையப்பன், கவிஞர் பரமகுரு, அரு. நாகப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம் அருணகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சிறப்பாக பணிபுரிந்த பேராசிரியர் சாமி தியாகராஜன், […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

கோவில் புனரமைப்பு பணிகள் தொடர்பான  ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்தில் வைத்து கோவில்கள் புனரமைப்பு பணிகள் தொடர்பான  ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கமிஷனர் லட்சுமணன், அரசு சிற்ப மற்றும் கட்டிடக்கலை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத்துறை செயற்பொறியாளர் சுந்தரப்பன், கோவில் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தில்   ராமர் பஜனை கோவில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கோவில் திருவிழாவிற்கு சென்ற பெண்” வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

6 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல் பகுதியில் மீனாள்  என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மீனாள்  வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு மீனாள்  அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“உடனடியாக திரும்ப பெற வேண்டும்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் பேருந்து நிலையம் அருகே வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தாலுகா செயலாளர் காந்திமதி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும் அதனை திரும்ப பெற வலியுறுத்தியும்  இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாதர் சங்கம், விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்…. லேட்டா வந்தது தப்பா…. மனைவி, மகளை பிளேடால் தாக்கிய கணவர்…!!!!

மனைவி மற்றும் மகளை தாக்கிய  நபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூவாநல்லூர் ஜெயந்தி காலனி பகுதியில் தனபால்-சாரதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தீபா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தீபாவின் கணவர் கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தீபா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தீபா வேலைக்கு சென்றுவிட்டு இரவு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனபால் தீபாவிடம் தகராறு செய்துள்ளார். மேலும் தனபால்  […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த பிணம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நடுவச்சேரி பகுதியில் அமைந்துள்ள ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் உடல் நசுங்கி இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர்  வாலிபரின்  சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்…. திடீரென நடந்த கோர சம்பவம் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவராயன்பேட்டை  பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான சரண்ராஜ் என்பவருடன் சேர்ந்து நாகை புறவழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உளுந்து காய வைத்த பெண்” வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம் நகையை பறித்து சென்ற வாலிபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊனைமோட்டூர் பிள்ளையார் கோவில் தெருவில் குப்பன்-அம்பிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அம்பிகா தனது  வீட்டின் முன்பு அமைந்துள்ள சாலையில் உளுந்தை காய வைத்து விட்டு தனது உறவினர்களிடம் பேசிக்கொண்டு நின்றுள்ளார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அம்பிகாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். இதனையடுத்து அம்பிகா தனது உறவினரிடம் தண்ணீர் எடுத்து வருமாறு கூறியுள்ளார். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இதுதான் காரணம்” வாலிபரின் விபரீத முடிவு…. டி.ஐ.ஜி.க்கு வந்த கோரிக்கை மனு….!!!!

டி.ஐ.ஜி. அனிவிஜயாவிற்கு கோரிக்கை மனு ஒன்று வந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சரக போலீஸ் டி. ஐ.ஜி. அனிவிஜயாவிடம் காவல்துறையினர் அத்துமீறலுக்கு எதிராக  கூட்டியக்கம் சார்பில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் குகையநல்லூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பவர் கடந்த 11-ஆம் தேதி மேல்பாடி காவல் நிலையம் அருகே உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த சரத்குமாரை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில்  வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தாலுகா கமிட்டி செயலாளர் ராஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசு அதனை திரும்ப பெற வேண்டும், மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை  தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு பவர் கட் ” வெளியான அறிவிப்பு ….!!!!

மின்மாற்றி பணிகள் நடைபெறுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அஞ்சல்வீதி, அகில்மனைத் தெரு, சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, தேரோடும் வீதி, தென்மாபட்டு, பெரியார் நகர், காந்தி வீதி, கறிக்கடைசந்து   ஆகிய பகுதிகளில்   நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக துணை மின் நிலையத்தின் செயற்பொறியாளர் செல்லத்துரை கூறியுள்ளார். மேலும் மின்சாரம் செல்லும் பகுதிகளில் மின்மாற்றி  பணிகள் நடைபெறுவதால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பங்குனி பொங்கல் வைக்கும் திருவிழா” கலந்து கொண்ட பக்தர்கள்…. பிரசித்தி பெற்ற கோவில்….!!!!

காளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாடார் பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 11-ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற பெண்…. நடந்த கொடூர சம்பவம் …. வாலிபரை தூக்கிய போலீஸ்….!!!!

பெண்ணை  கற்பழித்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுகந்திபுரம் கிராமத்தில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுகன்யா  கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சாப்பிடுவதற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சுகன்யா வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். இந்நிலையில் சுகன்யா அதே பகுதியில் அமைந்துள்ள முந்திரி காட்டில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்…. திடீரென நடந்த கோர விபத்து …. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!!

ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தியாகசமுத்திரம் மெயின் ரோட்டில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராணி அதே பகுதியில் அமைந்துள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோ நிலைதடுமாறி ராணியின் மீது பலமாக மோதியது . இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  ராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…. !!!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பன் கடை வீதி தெருவில் கொரடாச்சேரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில்  நின்ற வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த  விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சகார்தாஸ்  என்பதும் சட்டவிரோதமா  கஞ்சா விற்பனை செய்ய முயன்றதும்  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.  இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!!

வருமுன் காப்போம்  மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் “வருமுன் காப்போம்” சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், எம் .பி செல்வராஜ்,  உதவி திட்ட அலுவலர் ரத்தினகுமார், நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ் செல்வன், வலங்கைமான் ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பரசன், அரசு அலுவலர்கள், டாக்டர்கள், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் எம்.பி. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கக்கரைக்கோட்டை ஆதி திராவிடர் தெருவில் நல்லதம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுன்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பவுன்ராஜ் விளார்-கொல்லாங்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பவுன்ராஜின்  மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பவுன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. குழந்தை பிறந்த 2 மாதத்தில் தாய் திடீர் உயிரிழப்பு…. காரணம் என்ன…?

 மயங்கி விழுந்து  பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மட்டியான்திடல் பகுதியில் சண்முகம்நிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 5  வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் மீனாட்சிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2-வது  குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து  அந்த குழந்தைக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனாட்சி அருகில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு   சென்றுள்ளார். அப்போது திடீரென மீனாட்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக காரில் போதை பொருள் கடத்தி வந்த நபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் பகுதியில் சட்டவிரோதமாக போதைப்பொருள்  பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக காரில்  குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை  கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“திடீரென மயங்கி விழுந்த ஊழியர்” விசாரணையில் தெரிந்த உண்மை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

தண்ணீர் தொட்டியில் இருந்து கீழே  தவறி விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய காட்பாடி பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தர் கடையின் 6-வது மாடியில் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  சக ஊழியர்கள் சுந்தரை  மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுந்தரை  பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. திடீரென நடந்த கோர விபத்து ….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில்   விவசாயியான வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான விக்னேஷ் என்பவருடன் சேர்ந்து கங்களாஞ்சேரி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி வெற்றிவேலின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  வெற்றிவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார்  மருத்துவமனையில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“கொழுந்துவிட்டு எரிந்த வீடு” பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அருணகிரி மங்களம் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமசிவம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில்  பரமசிவத்துக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  அவரது மனைவி  தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பரமசிவம் தனது மனைவியின் சேலையை  தீ வைத்து கொளுத்தியுள்ளார். அப்போது திடிரென  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இவர்கள்தான் அதில் கலந்து கொள்வார்கள்” நடைபெற்ற கபடி போட்டி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் கபடி கழக நிர்வாகி கோபாலன், காளிதாஸ், ராமச்சந்திரன், மாவட்ட  அமெச்சூர்  கபடி கழக தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர் கலையரசன், அமைப்பு செயலாளர்  பக்கிரிசாமி, பொது செயலாளர் தனசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில்  நடைபெற்ற  போட்டியில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. புளிய மரத்தின் மீது மோதிய கார் “2 பேர் படுகாயம்” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 மரத்தின் மீது கார் மோதிய  விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பூக்கொல்லை பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் சாலை ஓரம் அமைந்துள்ள புளிய மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சலாமத்துநிஷா, ஹர்சத்  ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற பூஜைகள்….!!!!

சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூவனூரில் பிரசித்தி பெற்ற சதுரங்கவல்லபநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்  வீற்றிருக்கும்  சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது  வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியை  முன்னிட்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில்  பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம்  உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நிழல் இல்லாத நாள்”… நடைபெற்ற அறிவியல் விழிப்புணர்வு… விளக்கம் அளித்த துணை தலைவர்…!!!!

மாணவர்களுக்கு நிழல் இல்லாத நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி காந்தி சிலை முன்பு வைத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் “நிழல் இல்லாத நாள்” குறித்து அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது. இதில்  ஆசிரியர் எழிலரசி, கிளையின் பொருளாளர் பாஸ்கரன், அறிவியல் இயக்கத்தின் மாநில துணை தலைவர் சேதுராமன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மருத்துவ முகாம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. தொடங்கி வைத்த மாவட்ட முதன்மை நீதிபதி….!!!!

நடைபெற்ற மருத்துவ முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வைத்து சட்ட பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா, நீதிபதி முத்துக்குமரன், பாபுலால், சுதாகர், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பரமேஸ்வரி, மருத்துவர் நவீன் பாபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா முகாமை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“ஐயோ என் மகளை காணும்” பெண்ணிற்கு நடந்த உச்சக்கட்ட கொடூரம்…. உறவினர்களின் போராட்டம்….!!!

கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் கிராமத்தில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்ட சுகன்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுகன்யா அதே பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில்   சாப்பிடுவதற்கு செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சுகன்யா வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த  அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர் .  இந்நிலையில்  அதே […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அடக்கடவுளே!!…. கிணற்றில் தவறி விழுந்து” தொழிலாளி பலி” தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

கிணற்றில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள நாகநதி கிராமத்தில் கூலி தொழிலாளியான திருமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள்  உள்ளனர். இந்நிலையில் திருமலை வீட்டின் அருகே அமைந்துள்ள கிணற்றில் தண்ணீர் இறைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென திருமலை நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர்” திடீரென நடந்த கோர விபத்து….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாலாப்புரம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆட்டோ ஓட்டுநரான விஜயன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஜயன் பாபநாசம் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாகர்கோவிலில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் விஜயன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜயன்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிகள்…. பிரசித்தி பெற்ற ஆலயம்….!!!!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பூண்டி மாதா ஆலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி  நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூண்டிமாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டு நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு திருப்பலி  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை அதிபர் ரூபன்அந்தோணிராஜ், தியானமைய இயக்குனர் சாம்சன், உதவிப்பங்கு தந்தையர்கள் இனிகோ, ஜான்சன், ஆன்மிக தந்தை அருளானந்தம்,  கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உடனடியாக இதை செய்ய வேண்டும்” மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு….!!!!

குறிஞ்சி  இன  மக்கள் எழுச்சி கழக தலைவர் உத்தம குமரன் ஆட்சியருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு குறிஞ்சி  இன மக்கள் எழுச்சி கழக தலைவர் உத்தம குமரன் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தேவன் ஒடை, கருப்பூர், மண்ணியார் வாழ்க்கை, திருவைகாவூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான மலைக்குறவர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கூடை பின்னும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் மாற்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில்…. நடைபெற்ற தீமிதி திருவிழா…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!!!

மகா காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார் கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன்  கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு கடந்த 6-ஆம்  தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனையடுத்து அம்மனுக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எங்களை தாக்கியது ஏன்?…. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!!!

பாப்புலர் பிரண்ட் ஆப் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் வைத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் நஸ்ரத் பேகம்  தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் குஜராத், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், கர்நாடகா, கோவா, ஆகிய மாநிலங்களில் ராமநவமியை முன்னிட்டு நடைபெற்ற  ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. தொடங்கி வைத்த அமைச்சர்….!!!!

நூலகம் அறிவுசார் மையம் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பேரூராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்  1.95 கோடி மதிப்பீட்டில் நூலகம் அறிவுசார் மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன், பேரூராட்சி உதவி இயக்குனர் ராஜா, பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா ராணி, துணைத்தலைவர் கான் முகமது, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பிரசித்தி பெற்ற ஜலகண்டேஸ்வரர் கோவில்…. நடைபெற்ற பிரம்மோற்சவ விழா…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!!

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்றுள்ளது  வேலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இந்நிலையில் சாமிக்கு பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  இந்த பிரம்மோற்சவ விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சேலத்தில் திக் திக் !!…. கட்டையால் அடித்து” வாலிபர் படுகொலை”தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நண்பனை கட்டையால் அடித்து கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கிளிதான்பட்டரை  கிராமத்தில் லாரி ஓட்டுநரான ராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான செல்வம் என்பவருடன் சேர்ந்து  மது குடித்துள்ளார். அப்போது ராமன் செல்வத்திடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் ராமனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராமனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. மின்சாரம் தாக்கி”சிறுவன் பலி” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி 2-ஆம் வகுப்பு மாணவன்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆத்திக்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2-ஆம்  வகுப்பு படிக்கும் சபரி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சபரி விளையாடுவதற்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சபரி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் சபரி வீட்டின் பின்புறம் அமைந்துள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற குடும்பம்…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகையை  திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்துடன்  தனது சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து குடும்பத்தினர்    அதிர்ச்சி அடைந்தர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அனைவரும் நன்றாக வாழவேண்டும்…. நடைபெற்ற திருவிளக்கு பூஜை…. கலந்து கொண்ட பக்தர்கள்….!!!

உலக அமைதிக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் திருப்பாலைத்துறை பகுதியில் பிரசித்தி பெற்ற  தவள வெண்ணகை அம்பாள் உடனுறை பாலைவனநாதர்  கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் உலக மக்கள் நலனுக்காக 108 விளக்குகளை  கொண்டு திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்நிலையில்  ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு 108  திருவிளக்குகளை  ஏற்றி சாமியை வழிபட்டனர். இதனையடுத்து திருவடி குடில்சுவாமிகள் சொற்பொழிவாற்றினார். இந்த  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“திருவிழாவிற்கு சென்ற வாலிபர்” குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழச்சாலூர்  கிராமத்தில் மூக்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோமதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து  வந்த மூக்கன்  தனது உறவினர் ஊரில்  நடைபெற்ற திருவிழாவிற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மூக்கன்  அதே பகுதியில் அமைந்துள்ள ஊருணியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அவர் தண்ணீரில்  […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்” திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்  தவறி விழுந்து  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கரையங்காடு கிராமத்தில் விஜயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் ஆனந்தி தனது கணவர் விஜயபாலனுடன்  திருத்துறைப்பூண்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆனந்தி மோட்டார் சைக்கிளில் இருந்து  மயங்கி கீழே விழுந்துவிட்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த […]

Categories

Tech |