மயங்கி விழுந்து ஐகோர்ட் வக்கீல் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் இளஞ்செழியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இளஞ்செழியன் தனது நண்பரான ராமமூர்த்தி என்பவருடன் சேர்ந்து வெள்ளியங்கிரி மலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். இதனையடுத்து வெள்ளியங்கிரி 7-வது மலையில் அமைந்துள்ள சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இளஞ்செழியன் மயங்கி விழுந்து விட்டார். இந்நிலையில் […]
