Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…. கமிஷனர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்…. சென்னையில் பரபரப்பு….!!!!

காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்வி என்ற பெண்ணை  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மணிவண்ணனுக்கும் அவரது மனைவி செல்விக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வி  மகனுடன் சேர்ந்து தனது  தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு  செல்வியின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காணாமல் போன செல்போன் கோபுரங்கள்…. புகார் அளித்த நிறுவன ஊழியர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

செல்போன் கோபுரங்களை திருடிய மர்ம நபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் கோசலகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பிராஜெக்ட் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோசலகுமார் பணிபுரிந்து வரும் அந்த தனியார் நிறுவனம் கடந்த 2010-ஆம் ஆண்டு ஒத்தக்குதிரை, தண்ணீர்பந்தல் புதூர், நல்லகவுண்டன்பாளையம், கள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள செல்போன் கோபுரங்களை சுமார் 1 1/2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. இந்த செல்போன் கோபுரம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எனக்கு வழி விடு…. பேருந்து மீது கல்லை எரிந்த வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள நெருஞ்சிப்பேட்டை சாலையில் திருப்பூரில் இருந்து  பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பேருந்தை முந்தி செல்ல வேண்டும் என  ஹாரன்  அடித்துள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுநர் சக்திவேல் வழி கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பேருந்தின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கல்லை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இப்படிதான் காப்பாற்றி கொள்ள வேண்டும்…. நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

பொது மக்கள் வெள்ளத்தில் இருந்து தங்களை தாங்களே எப்படி காப்பாற்றி கொள்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள குளத்தில் சென்னிமலை தீயணைப்பு நிலையம் சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் துறை, வருவாய் மண்டல துணை தாசில்தார் பரமசிவம், தீயணைப்பு நிலைய அதிகாரி சரவணன், வருவாய் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பொதுமக்கள் வெள்ளம் ஏற்படும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டின் அருகே நடந்து சென்ற மூதாட்டி…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியகாடு பகுதியில் மூதாட்டியான  அம்மணியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு  கண் பார்வை குறைபாடு இருந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் முழுமையாக கண்பார்வை கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அம்மணியம்மாள் வீட்டின் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு அருகில் இருந்த 20 அடி ஆழமுள்ள  கிணற்றில் தவறி விழுந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி…. முதல் இடத்தை பிடித்த ஓரியண்டல் அணி…. பரிசுகளை வழங்கிய அதிகாரிகள்….!!!!

மாவட்ட அளவிலான சி.டிவிஷன் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள எச். ஏ. டி. பி. விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவில்  நடைபெற்ற  சி.டிவிஷன் கால்பந்து லீக் போட்டியின் கடைசி நாள் போட்டி நடைபெற்றது. இதில் விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், கால்பந்து கழக தலைவர் மணி, துணை தலைவர் மனோகரன் வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நடைபெற்ற போட்டியில் ஓரியண்டல் அணி 3-0 என்ற கோல்  […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பலாப்பழத்துடன் குளிர்பானம் குடித்த சிறுவன் சாவில் திடீர் திருப்பம்”…. தாய் அளித்த மரண வாக்குமூலம்…. பெரும் அதிர்ச்சி…!!!!!!!!

விஷம் குடித்து தாய் மற்றும் மகன்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரணி என்ற மனைவியும், இனியா , பரணிதரன் என்ற 2  குழந்தைகளும்  இருந்துள்ளனர்  . இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி வேல்முருகன் தனது மனைவி பரணி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து சாம்பார் சாதம், தயிர் சாதம், பலாப்பழம் ஆகியவற்றை  சாப்பிட்டு விட்டு குளிர் பானங்களை குடித்துள்ளனர். அப்போது திடீரென 4 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தற்காப்பு கலையின் சப்-ஜூனியர் போட்டி…. மாநில அளவில் 2-வது இடம் பிடித்த மாணவர்கள்…. குவிந்து வரும் பாராட்டுகள்….!!!!

தற்காப்பு கலையின் 19-வது சப்-ஜூனியர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் வைத்து கடந்த 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் மாநில அளவிலான தற்காப்பு கலையின் 19-வது சப்-ஜூனியர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த குங்பூ மாணவர்கள் கலந்துகொண்டு 4 தங்க பதக்கமும், 6 வெள்ளி பதக்கமும், 5 வெண்கல பதக்கமும் பெற்று மாநில அளவில் 2-வது இடம் பிடித்தனர். இவர்களை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குடோனில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடோனில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுப்பம் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட தானே புயலால் பணி  கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் ஆலை அமைக்கும் முயற்சி  பாதிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த ஆலை வளாகத்தில் உள்ள குடோன்களில் பல கோடி ரூபாய் மதிப்பில் இரும்பு, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 தம்பதிகள்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

கஞ்சா கடத்தி வந்த 2 தம்பதிகளை காவல்துறையினர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு   மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 தம்பதிகளை  காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்கள் குண்டலபட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக்-பாண்டிமீனா, செண்பகராஜ்-சித்ராதேவி ஆகியோர்   என்பதும், சட்டவிரோதமாக  கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏன் பாலம் அமைக்க வில்லை?…. கிராம மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பாலம் அமைத்து தரக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாமரத்துபட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஓடும் திருமணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே  பல ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது இந்த தரைப்பாலம் பாசிப்படர்ந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே புதிதாக உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம  மக்கள்  அதிகாரிகளிடம் பல […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில்…. 17 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் பணிகள் …. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

 பிரசித்தி பெற்ற கோவிலில் நடைபெறும் பணிகளை  அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அடுத்த மாதம்  6-ஆம்  தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கோவிலை சுற்றி வண்ணகற்கள் பதிக்க பேரூராட்சி சார்பில் 17 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. இதனை பேரூராட்சி உதவி இயக்குனர் விஜயலட்சுமி, அறநிலையத்துறை உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடன் செயலியில் கடன் பெற்ற வாலிபர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில்  பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது  குடும்ப செலவுக்காக கடன் செயலி மூலம் 5 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஆனால்  பாண்டியன் 1,500 ரூபாய் மட்டும்  பாக்கி வைத்துள்ளார். இதனையடுத்து பாண்டியனின் செல்போனிற்கு  உடனடியாக மீதி பணத்தை செலுத்துமாறு குறுஞ்செய்தி ஒன்று  வந்துள்ளது. ஆனால் பாண்டியனால் பணத்தை   செலுத்த முடியவில்லை. இந்நிலையில்   பாண்டியனின் புகைப்படத்தை பாலியல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. மனைவியை அடித்து கொலை செய்த வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மனைவியை அடித்து கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில் வியாபாரியான   சாகுல் அமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்ரின் ரோஸ் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பிறந்து 10 மாதம் ஆன பெண் குழந்தை ஒன்று உள்ளது.  இவரது    வீட்டில் நீண்ட நேரமாக குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு அப்ரின் ரோஸ் மயங்கிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற வாலிபர்…. கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவல்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

ஏ.டி.எம். எந்திரத்தை  உடைத்து பணம் திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பெரியமேடு பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மையத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் பணம் எடுத்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஏ.டி.எம். மையத்திற்கு வந்த வாலிபர் ஒருவர்  எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை திருட முயன்றுள்ளார்.  ஆனால் பணம் வராததால் அந்த வாலிபர் சென்றுவிடடார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி சண்டை போடுற?…. மனைவியை கொலை செய்த கணவர்…. அதிரடி உத்தரவிட்ட நீதிபதி….!!!!

பெண்ணை  கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள டி.பி. சத்திரம் பகுதியில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஹரிகிருஷ்ணன்  கடந்த 2014-ஆம் ஆண்டு  மது குடித்துவிட்டு தனது மனைவியிடம்  தகராறு செய்துள்ளார். அப்போது சரஸ்வதி அவரை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன் சரஸ்வதி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  சரஸ்வதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவன்….. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

10-ஆம்  வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் எழில்நகரில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10-ஆம்  வகுப்பு படிக்கும் முகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் 10-ஆம்  வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. ஆனால் முகேஷ் தேர்வில்  தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முகேஷ் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவ்வளவு அமெரிக்க டாலரா?…. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!!!

சட்டவிரோதமாக கொண்டு வந்த அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அதைப்போல் நேற்று சுங்கா இலாகா  அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்ற  வாலிபரின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் முகமது ஷாருக்கான் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தகராறு செய்த அக்காள் கணவர்…. பெண் வழக்கறிஞர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

பெண் வழக்கறிஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டம்பாக்கத்தில் சின்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி(31) என்ற மகள் உள்ளார். இவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் பார்வதியின் அக்காள் கணவரான கருணாகரன் என்பவர் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனை பார்வதி, அவரது தாய் ராணி, தங்கை ஜெயந்தி ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும்…. கோரிக்கை மனுவை அமைச்சரிடம் அளித்த வணிகர் சங்க தலைவர்….!!!!

நடைபெறும் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளால் சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சென்னை மாவட்டத்தில் அம்பத்தூர்-ஆவடி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை தற்போது தமிழக அரசு விரிவாக்க முடிவு செய்து பணிகள் தொடங்க உள்ளது. இதனால் சாலையின் ஓரங்களில் மலர், காய்கறி  போன்ற கடைகள் நடத்தும்  சிறு தொழில்  வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, மாநில துணை தலைவ ராமலிங்கம் உள்ளிடோர்  நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

12 ஆயிரம் கன அடியாக குறைந்த தண்ணீர்…. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி…. அதிரடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

 அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் குளித்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி முதல் அருவியில் தண்ணீர் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்போது மழை நின்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் குறைந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வினாடிக்கு 1,452 கன அடி தண்ணீர் திறப்பு…. கலக்கும் ரசாயன கழிவுகள்…. அதிர்ச்சியில் விவசாயிகள்….!!!!

ஆற்று  தண்ணீரில் ரசாயன கழிவுகள் கலந்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் கொலவரப்பள்ளி என்ற அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்நிலையில் நேற்று தென்பெண்ணை அணையில் இருந்து கொலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 1,452 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் தென்பெண்ணை ஆற்றின் கரை ஓரங்களில் இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும்  ரசாயன கழிவுகள் தண்ணீரில்  கலந்து வருவதால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சிக்கிய மர்ம கும்பல்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

 கஞ்சா கடத்திய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாம்மத்துகோணம் பகுதியில் தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 3  வாலிபர்களை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெரீஸ், பிரகாஷ், வினோத் ஆகியோர் என்பதும்,  கஞ்சாவை வைத்திருந்ததும்  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒரு  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு குடிக்க பணம் தருவியா மாட்டியா?…. பெண்ணை அவதூறாக பேசிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணை  அவதூறாக பேசி தற்கொலைக்கு தூண்டிய  2  பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாயக்கனூர் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் வீட்டின் அருகே அமைந்துள்ள பெட்டி கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த கோணமண்டையன், பிரபாகரன் ஆகிய 2 பேர் வந்து  கார்த்திக்கிடம் மது குடிப்பதற்கு ஆயிரம் ரூபாய் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் கார்த்திக் பணம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் பரபரப்பு!!… . கத்தியால் கழுத்தை அறுத்து “வாலிபர் படுகொலை”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜதானிகோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மனோஜ்குமார், அன்பழகன் ஆகியோருக்கும் இடையே கோவில் திருவிழாவில் பேனர் வைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ராஜ்குமார் தனது நண்பரான பெருமாள்ராஜா என்பவருடன் அதே பகுதியில் அமைந்துள்ள காளி பகவதி அம்மன் கோவில் அருகே நின்று பேசிக் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்…. வாலிபரின் வெறிச்செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் சந்திரகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலியபெருமாள் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கலிய பெருமாளுக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து கலியபெருமாள் கடந்த 2019-ஆம் ஆண்டு அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சாமியார்பேட்டையில் உள்ள  அய்யப்பன்  என்பவர்  […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கூட்டுறவு சங்கத்தின் அருகில் கட்டப்பட்டிருந்த மாடுகள்…. விவசாயிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

மாடுகளை இழந்த  விவசாயிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவாரண தொகையை வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்லகச்சேரி கிராமத்தில்  விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 4  மாடுகளை நேற்று முன்தினம்  அதே பகுதியில் அமைந்துள்ள பழமையான  கூட்டுறவு சங்கத்தின்  அருகே கட்டியுள்ளார். இந்நிலையில்   அப்பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அப்போது திடீரென கூட்டுறவு சங்க கட்டிடத்தின் சுவர்  இடிந்து ஏழுமலையின் மாடுகள் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  […]

Categories
புதுக்கோட்டை

மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி…. திடீரென நடந்த விபரீதம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!!!

மரம் முறிந்து விழுந்து தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்லாம்பாக்கம் பகுதியில் தொழிலாளியான  குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது மனைவியுடன் சேர்ந்து மணம்தவிழ்ந்தபுத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது இடி மின்னலுடன் கன மழை பெய்துள்ளது. இந்நிலையில் சாலை ஓரம் இருந்த மரம் திடீரென முறிந்து மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குப்புசாமியின் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குப்புசாமியை  அருகில் இருந்தவர்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலித்து திருமணம் செய்த பெண்…. குடும்பத்தினர் படுத்திய கொடுமை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில்  சத்யா அதே பகுதியை சேர்ந்த கணபதி என்பவரை  கடந்த 4 மாதங்களுக்கு முன்பு  காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது சத்யா 3 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.  ஆனால் கணபதியின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு சத்யாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சத்யா நேற்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரில் மிதந்து யோகா செய்யும் ஆசிரியர்…. நடைபெறும் உலக யோகா தினம்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

தண்ணீரில் மிதந்து யோகா செய்யும் ஆசிரியரை பலரும் பாராட்டி வருகின்றனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள மாக்கினாம்பட்டி நகரில் மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆசிரியையான கீதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உலக யோகா தினத்தை முன்னிட்டு கீதா தண்ணீரில் மிதந்தபடி பாத ஆசனம், பத்ம கோபுர ஆசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது. நான் கடந்த 8 ஆண்டுகளாக யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இதனால் உடல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பலாப்பழம் சாப்பிட்ட குடும்பம்…. மகனை பறிகொடுத்த பெற்றோர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பழம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கே. ஆலம்பாடி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரணிதரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில்  நேற்று முன்தினம் வேல்முருகனின் குடும்பத்தினர்  பலாப் பழம் சாப்பிட்டுவிட்டு தயிர் சாதத்தை சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து வேல்முருகன் ,அவரது மனைவி, மகன் ஆகிய 3 பேரும்  வாந்தி எடுத்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் 3  பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ராஜா முத்தையா […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பறக்க முடியாமல் தவித்த மயில்…. சமூக ஆர்வலர்கள் அளித்த தகவல்…. வனத்துறையினரின் செயல்….!!!!

படுகாயமடைந்த மயில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்காடு  பகுதியில் பெண் மயில் ஒன்று காயங்களுடன்  பறக்க முடியாமல் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர் ராஜ்குமார், முகமது ஆகியோர்  உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  வனத்துறையினர் படுகாயமடைந்த மயிலை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மயில்  பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆசிரமத்தில் தங்கிய மாணவி…. சாமியாரின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!!

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 20 வயதான கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவி  வெள்ளத்துக்கோட்டை கிராமத்தில் சாமியாரான முனுசாமி என்பவர் நடத்தி வரும் ஆசிரமத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 14-ஆம் தேதி அந்த மாணவி திடீரென ஆசிரமத்தில் வைத்து விஷம் குடித்து மயங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவ்வளவு நன்மை இருக்கா?…. மரங்களில் தொங்கும் வவ்வால்கள்…. பார்வையிடும் பார்வையாளர்கள்….!!!!

அருங்காட்சியகத்தில் தொங்கும் வவ்வால்களை பார்வையாளர்கள் பார்த்து செல்கின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரில் அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியக வளாகத்தில் மிகவும் பழமையான மரங்கள் அதிகளவில் இருக்கிறது. இந்நிலையில் மரங்களின் கிளைகளில் வவ்வால்கள் தொங்கியபடி ஒலிகளை எழுப்பி வருகிறது. இதனை அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது. இந்த வவ்வால்கள் இரவில் இரை தேடி செல்கின்றது. மீண்டும் மரங்களுக்கு வந்து விடுகின்றது. இந்த வவ்வால்கள்  பூக்களின் மகரந்த சேர்க்கைக்கும், மரத்தின் விதைகள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!

சாலையில் லாரி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீரிப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகளிடம் 280 மூட்டை நெல்லை கொள்முதல் செய்து கொண்டு சிறுநாவலூர் சாலையில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வயலில்  கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சிவா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போது அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்?…. மர்மமான முறையில் உயிரிழந்த காவலர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மர்மமான முறையில் உயிரிழந்த காவலாளியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செம்மஞ்சேரி பகுதியில் பண்ணை வீடு ஒன்று அமைந்துள்ளது. இந்த வீட்டின் காவலாளியாக தேசிங்கு என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அவரது மகன் மோகநாதன் என்பவர் சாப்பாடு கொடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு தேசிங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகநாதன்   உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மூத்த குடிமக்கள் கவனத்திற்கு” நாளை முதல் இலவச டோக்கன்கள் வழங்கப்படுகிறது…. வெளியான அறிவிப்பு….!!!!!

மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள்  வழங்கப்படுகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவசமாக பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட்டது. தற்போது அடுத்த அரையாண்டிற்கான டோக்கன்கள் அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, சென்ட்ரல் பேருந்து நிலையம், பாரிமுனை, குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி, வடபலனி, ஆதம்பாக்கம், வேளச்சேரி, அண்ணா நகர், கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, அயனாவரம், பாடியநல்லூர், செங்குன்றம், தாம்பரம், பூந்தமல்லி, பெரம்பூர் பேசின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணை கற்பழித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில்   மனநலம் பாதிக்கப்பட்ட 48 வயதுடைய  பெண் ஒருவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அந்த பெண் தனியாக இருந்துள்ளார். அப்போது  அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு அவரை  கற்பழித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாயார் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி  ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமி கடந்த 9-ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கட்டாயமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்…. தம்பதியின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!

கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டுவந்தாங்கள் கிராமத்தில் வரதராஜுலு -தனலட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனலட்சுமி வீட்டில் உள்ள கழிவறையில் திடீரென வழுக்கி  விழுந்தார். இதில் படுகாயமடைந்து தனலட்சுமியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தனலட்சுமியை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வரதராஜுலு, தனலட்சுமி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கட்டிட வேலைக்கு சென்ற பெண்…, திடீரென நடந்த கொடுமை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாடியில் இருந்து  தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராஜாதோப்பு கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சாவித்திரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  நேற்று லோகு என்பவர் வீட்டில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சாவித்திரி 1- வது மாடியில் இருந்து  தவறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயமடைந்த சாவித்திரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நண்பனுடன் சென்ற வாலிபர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எடப்பாளையம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று பவுன்குமார் தனது நண்பரான சம்பத் என்பவருடன் சேர்ந்து திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பவுன்குமாரின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பவுன்குமாரை  அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற செல்போன் திருட்டு…. வசமாக சிக்கிய காதலர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

செல்போன் திருடிய காதலர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து  தினம் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 16-ஆம் தேதி பயணி ஒருவரின் செல்போனை  மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பயணி உடனடியாக ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயணிகளுடன் கிளம்பிய விமானம்…. திடீரென ஏற்பட்ட கோளாறு…. அவதி அடைந்த பயணிகள்….!!!!

விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பகுதியில் விமான நிலையம் ஒன்று  அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து நேற்று  இரவு ஓமன் நாட்டின் தலைநகருக்கு 150-க்கும் மேற்பட்ட  பயணிகளுடன் விமானம் ஒன்று  கிளம்ப தயார் ஆனது. அப்போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில்  விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் நீண்ட நேரம் போராடி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரை  சரி செய்தனர். இதனையடுத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏன் சேவையை சரியாக செய்யவில்லை?…. இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது வந்த புகார்…. அதிரடியாக உத்தரவிட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்….!!!!!

இன்சூரன்ஸ் நிறுவனம் மீது வாடிக்கையாளர் ஒருவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ராஜேந்திரனின் கார் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து ராஜேந்திரன் காரை பழுது பார்க்க செலவழித்த 85 ஆயிரத்து 187 ரூபாய் பணத்தை தான் இன்சூரன்ஸ் செய்த காப்பீட்டு நிறுவனத்தில் கேட்டு மனு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சாலையில் வந்து கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

2 பேருந்துகள்  மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு நான்கு முனை சந்திப்பு சாலையில் சென்னையில் இருந்து  அரசு விரைவு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக கன்னியாகுமரியில் இருந்து வந்த ஆம்னி பேருந்து நிலைதடுமாறி அரசு விரைவு பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த   5 பேரையும்  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இவர் மீதுதான் தவறு இருக்கு…. போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

போக்குவரத்து  கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டு சாலையில் அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த லாரி பேருந்தின் மீது  மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 35 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து காவல்துறையினர் பேருந்து  ஓட்டுநரான கணேசமூர்த்தி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள்  காவல்துறையினரிடம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தேர் திருவிழா…. பக்தர்களுக்கு நேர்ந்த கொடுமை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தேர் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாதேஅள்ளி  கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 13-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென தேர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அதே பகுதியை சேர்ந்த மனோகரன், சரவணன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் காயமடைந்த 4  பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு வந்த பா.ம.க தலைவர்…. மோதிக்கொண்ட காவலர்கள்…. உத்தரவிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!!!

2  காவலர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்று கொண்டிருந்தார். அப்போது காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில்  டாக்டர் அன்புமணி ராமதாசின்  வாகனம் சாலையில் சென்ற போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை காவல்துறையினர் சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது போலீஸ் ஏட்டு  ஒருவர் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் கிடந்த முதியவர் சடலம்…. பொதுமக்கள் அளித்த புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ஆற்றில் கிடந்த முதியவரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி ஆற்றில் நேற்று  முதியவர்   ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த முதியவரின்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்த நபர் அதே […]

Categories

Tech |