முத்துவடுகநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் பிரசித்தி பெற்ற முத்துவடுகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அதே பகுதியில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். […]
