பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரிபாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு தாமரைக்குளம், நல்லடிபாளையம், பட்டணம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் பேருந்தின் மூலம் பயணம் செய்து படித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த தனியார் பேருந்து கொரோனா தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால் தற்போது ஒரே ஒரு அரசு பேருந்து மட்டும் கிணத்துக்கடவிலிருந்து இயக்கப்படுகிறது. […]
