Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லையில் பேனர்கள் அகற்றம்” பாதிக்கப்படும் பொதுமக்கள்…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பகுதி மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் விளம்பர பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில்  அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து  நகராட்சி தலைவர் அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் அகற்றுமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி நகராட்சி  அதிகாரிகள் கடந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில்” நடைபெறும் வைகாசி திருவிழா…. தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்….!!!!

காமாட்சி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழப்பனையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 8-ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி போன்றவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்து தங்களது நேர்த்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பரபரப்பு!!…. மது குடித்ததால் பெயிண்டரை தீர்த்துக்கட்டிய குடும்பம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெயிண்டரை  கொலை செய்த மனைவி உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள  ஆலப்பாக்கம் பகுதிகள்  பெயிண்டரான  ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து  அவரது மனைவி வசந்தா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜேந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த அறிக்கையில்  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள்…. இங்கிலாந்து பெண்ணின் புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் புகார்  அளித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த  பார்பரா எலிசபெத் வில்லிஸ் என்ற பெண் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் எனக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து என இரட்டை குடியுரிமை உள்ளது. எனது முன்னோர்களின் பூர்வீக சொத்து கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இந்நிலையில் நான் கடந்த 2014- ஆம் ஆண்டு கடலூரில் 2 ஏக்கர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“இளநீர் கடைக்கு சென்ற முதியவர்” தூக்கி வீசிய மோட்டார் சைக்கிள்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!!

மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அத்தியூத்து கிராமத்தில் முதியவரான பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆலங்குளம்-தென்காசி நெடுஞ்சாலையில் இளநீர் கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பெரியசாமி நெடுஞ்சாலையில்  அமைந்துள்ள தனது கடைக்கு நடந்து  சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பெரியசாமியின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories

Tech |