இடி விழுந்து சேதம் அடைந்த கோபுர பொம்மைகளை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கட்ரமணசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இந்த பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது வெங்கட்ரமணசாமி கோவிலின் கோபுரத்தை மின்னல் தாக்கியது. இதில் கோபுரத்தில் இருந்த 3 பரிவார சாமி பொம்மைகள் உடைந்து கீழே விழுந்து உள்ளது. மேலும் இரவு நேரம் என்பதால் யாரும் அங்கு இல்லை. இதனால் அசம்பாவிதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளது.இதனை […]
