மாலத்தீவின் முன்னாள் அதிபர் நஷீத் வீட்டின் வெளியில் குண்டு வெடித்ததில் படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவினுடைய முன்னாள் அதிபர் மற்றும் தற்போது நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கும் மொஹமத் நஷீத்தின் குடியிருப்பிற்கு வெளியில் குண்டு வெடித்துள்ளது. இதனால் நஷீத் தன் வாகனத்தில் ஏறுவதற்கு முயன்றுள்ளார். அப்போது அங்கு நின்ற ஒரு இருசக்கர வாகனம் வெடித்துச் சிதறியுள்ளது. இதனையடுத்து, உடனடியாக அவரை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், சிகிச்சை பெற்று வருவதாக […]
