மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான உறைவிடப் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உணவு சாப்பிட்ட 8 மாணவா்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் 2 மாணவா்கள் நேற்று உயிரிழந்தனா். அதாவது கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் 2 மாணவர்களும் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் 2 மாணவா்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. தற்போது நாசிக் மாவட்ட மருத்துவமனையில் அவா்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா். இதனிடையில் இறந்த மாணவா்கள் பிவாண்டியைச் சோ்ந்த ஹா்ஷல் போயிா் (23), நாசிக்கைச் […]
