தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் அரசு வேலை வழங்கக்கோரி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்க கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வசித்தார்கள். பின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கொடுத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முடிவைத்தானேந்தல் அருகே […]
