மாற்றுத்திறனாளி தம்பதியினர் அரசு வேலை வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலவாடி பகுதியில் சுரேஷ்-முத்துலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் மாற்றுத்திறனாளிகள் ஆவர். இந்நிலையில் தம்பதியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு தம்பதியினர் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி கோரிக்கையை வலியுறுத்தி தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட […]
