மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு முன்பாக மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது அடிப்படை வசதிகூட இல்லாத மாற்று திறனாளிகள் கட்டிடத்தை புதிய இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை முறையாக அறிவிப்பு பலகைகள் மூலம் தெரிவிக்க வேண்டும் எனவும், […]
