பள்ளி கல்வித்துறை சார்பாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். அவர் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். பின்னர் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் நிகழ்ச்சியையும் அவர் தொடங்கி வைத்துள்ளார். அப்போது மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை சைகை மொழியில் பாடியது […]
