பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் இருக்கும் ரயில் நிலையம் முன்பு மாற்றுத் திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க ஒன்றிய செயலாளரான சீதாலட்சுமி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. அவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில்களில் தனி பெட்டி அமைத்து தரவேண்டும், பயணச் சீட்டில் கட்டணச் சலுகை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை அரசிற்கு முன்வைத்து போராட்டத்தை […]
