மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கு தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கும் முறையை கடலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் சுய தொழிலை ஊக்குவிக்க வெளியிட்டுள்ள செய்தி கூறியிருப்பதாவது “மாற்றுத்திறனாளிகளின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. அதன்படி 2022-23 ஆண்டுக்கான கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், மிதமான மன வளர்ச்சி குறையுடைய மாற்றுத்திறனாளிகள், கடுமையான மன வளர்ச்சி […]
