தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்று சான்றிதழில் ஜாதியை குறிப்பிடுவது நடைமுறையில் உள்ளது. அத்துடன் மாற்றுச் சான்றிதழில் ஜாதியைக் குறிப்பிடும் போது தவறுதலாக வேறு ஜாதிப் பெயரை குறிப்பிட்டு அதன் பின்னர் பள்ளி நிர்வாகத்தின் மூலம் திருத்திக் கொள்ளக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு அடிப்படையில் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகின்றது. […]
