தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம்:- போளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று (மார்ச்.5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை போளூர் பேரூராட்சி , மண்டகொளத்தூர், அத்திமூர், கலசபாக்கம், ராந்தம் , ஜடாதாரிகுப்பம், பெலாசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. […]
