மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவியை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். இது குறித்து மாணவியின் பெற்றோர் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதன் காரணமாக காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். […]
