நாமக்கல் கவராநகர் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு பொதுமக்கள் வந்தார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள என்.கொசவம்பட்டி கவரா நகர் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவானது வருகின்ற 21ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதனால் பக்தர்கள் நேற்று காவேரி ஆற்றிற்கு சென்று பம்பை, செண்டை மேளம் முழங்க தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றார்கள். மாலையில் பொங்கல் வைத்து பூஜை செய்தனர். இவ்விழாவையொட்டி வருகின்ற […]
