டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சேலம் பெரியவடகம்பட்டி யில் மாரியப்பனுக்கு பூங்கொத்து கொடுத்து ஆட்சியர் கார்மேகம் வரவேற்றார். இதையடுத்து மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து மாரியப்பனுக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
