திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அலுவலர் தர்மா ரெட்டியின் மகன் சந்திரமௌலி (26) ரெட்டிக்கு நேற்று டிச..18-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சந்திரமௌலி ரெட்டி முதலில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பிறகு கேத்லாப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதால் கவலைக் கிடமாக இருக்கிறார். ஆகவே […]
