மாயமான வாலிபர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு பூ வியாபாரியான ஜெகதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெகதீஷ் வீட்டிற்கு திரும்பி வராமல் மாயமானார். இதுகுறித்து அவரது உறவினர்கள் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]
