நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றை கடக்க முயன்ற கட்டிட தொழிலாளி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடார்பாளையம் பகுதியில் கவின்குமார்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் சரளைமேடு பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி(37) என்பவரும் இணைந்து வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் பகுதியில் வேலைக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றை நீந்தி அக்கரைக்கு […]
