மருமகள் பிரிந்து சென்றதால் மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் மாரியம்மாள்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மருமகள் உள்ளார். இந்நிலையில் மாரியம்மாளும், ரேவதியும் இணைந்து குழு மூலம் கடன் வாங்கியுள்ளனர். ஆனால் வியாபாரத்தில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க இயலவில்லை. இதனால் ரேவதி தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மருமகள் […]
