மாமியாரை தாக்கிய மருமகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குப்பநாயக்கன்பட்டி பகுதியில் மயில்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு உதயகுமார் என்ற மகன் உள்ளார். இவருக்கு தவமணி என்ற மனைவி உள்ளார். இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஈஸ்வரி அதிகாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். […]
