தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்த மான்கள் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காங்குப்பம் மகாதேவமலையை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் தண்ணீரைத் தேடி இரண்டு புள்ளிமான் குட்டிகள் ஊருக்குள் நுழைந்தது. இதனை பார்த்த நாய்கள் மான்களை துரத்தின. அப்போது மான் குட்டிகள் கே.வி குப்பம் கடை வீதிகளின் வழியாக ஓடி சந்தை மேடு பகுதிக்கு வந்தடைந்தது. இதனை பார்த்த வாலிபர்கள் மான்களை பிடித்து கட்டி வைத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். […]
