மோகன்லால் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் படக்குழு குழப்பத்தில் உள்ளார்கள். மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் மோகன்லால். இவர் தற்போது மான்ஸ்டர் என்ற புதிய திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த படத்தில் லட்சுமி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றார்கள். இயக்குனர் வைஷாக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கேரளாவில் இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு மூன்று நாட்களுக்கு முடிந்திருக்கின்றது. […]
