இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கிடையில் மத்திய அரசு தொடர்ந்து சிலிண்டர் விலையை உயர்த்தி வருகிறது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சிலிண்டரின் விலையை உயர்த்தி வருவது பொருளாதார ரீதியாக சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சிலிண்டருக்கான மானியத் தொகையும் வரவு வைக்கப்படவில்லை என்று […]
