மாநில பேரிடா் மீட்புப்படையில் இருந்து (எஸ்டிஆா்எஃப்) வரும் நிதியை தனிநபா் வங்கிக் கணக்குக்கு ஆந்திரஅரசு மாற்றுவதற்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆந்திர மாநிலத்தை சோ்ந்த பல்ல ஸ்ரீநிவாச ராவ் என்பவா் சாா்பாக உச்சநீதிமன்றத்தில் இது குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ரூபாய் 50,000 கருணைத்தொகை வழங்குவது குறித்து தன் உத்தரவு முறையாக அமல்படுத்தப்படுவதை நீதிமன்றம் தீவிரமாக கண்காணித்து வரும் சூழ்நிலையில், ஆந்திர மாநில அரசு மாநில […]
